animated gif how to

கொழும்பு, கல்முனை அடுத்த மேயர் யார் - முஸ்லிம்களிடையே பரபரப்பு

October 07, 2011 |

October 07, 2011.... AL-IHZAN Local News

கொழும்பு மற்றும் கல்முனை மாநகர சபைத் தேர்தலில் முஸ்லிம்கள் மேயராக வாய்ப்பிருக்கும் நிலையில் அடுத்த மேயர் யார் என்ற பரபரப்பு நாட்டு முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ளது.


கல்முனையில் அநேகமாக முஸ்லிம் மேயர் ஒருவர் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் முஸ்ம்மில் அடுத்த மேயராக வருவாரென்ற நம்பிக்கையில் முஸ்லிம்கள் காத்திருப்பதாக மூத்த முஸ்லிம் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.


அதேவேளை 23 உள்ளூராட்சி சபைகளுக்கான வாக்களிப்பு நாளை சனிக்கிழமை 8 ஆம் திகதி காலை 7  மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த 23 உள்ளூராட்சி சபைகளில் 17 மாநகர சபைகளும், 5 பிரதேச சபைகளும் ஒரு நகரசபையும் அடங்கியுள்ளன.


2010 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பு படி நடைபெற இருக்கும் இத்தேர்தலில் 1,589,622 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த 23 உள்ளூராட்சி சபைகளுக்கும் 420 பேர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவுள்ளனர். என்றா லும் 26 அரசியல் கட்சிகளும் 104 சுயேச்சைக் குழுக்களும் சார்பாக 5,488 பேர் அபேட்சகர்களாக போட்டியிடுகின்றனர்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!