October 05, 2011.... AL-IHZAN Local News
23 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றன. தேர்தல் தொடர்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர், கட்அவுட் அனைத்தையும் இன்று நள்ளிரவுடன் அகற்ற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான அரசியல் கட்சிகள் இன்று தமது இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தவுள்ளன. 17 மாநகர சபை, ஒரு நகர சபை மற்றும் 5 பிரதேச சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 8ம் திகதி இடம்பெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடவென 160 அரசியல் கட்சிகளும் 104 சுயேற்சைக் குழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன.
அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 3813 வேட்பாளர்களும் 2675 சுயேற்சை வேட்பாளர்களுமாக மொத்தம் 6488 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

RSS Feed
October 05, 2011
|

0 கருத்துரைகள் :
Post a Comment