animated gif how to

மத்திய கிழக்கில் இஸ்ரேலிடம் மட்டுமே அணு ஆயுதம்- துருக்கி பிரதமர்

October 07, 2011 |

October 07, 2011.... AL-IHZAN World News

இஸ்ரேலிடம் அணு ஆயுதம் இருப்பதாலும் அரச பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாலும் “டெல் அவிவ்” பிராந்தியத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று துருக்கி நாட்டு பிரதமர் ரெசப் தய்யிப் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.


கடந்த புதன் அன்று தென் ஆப்ரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள துருக்கி பிரதமர் இஸ்ரேலிடம் அணு ஆயுதம் இருப்பதால் பிராந்தியத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதை தாம் காண்பதாக அன்டோலியா பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.    


மேலும் இஸ்ரேலின் அணு ஆயுத பிரச்சனையில் மேற்குலகம் இரட்டை வேடம் போடுவதாக கடந்த மாதம் கூறினார். மேலும் இஸ்ரேல் மட்டுமே மத்திய கிழக்கு நாடுகளில் அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடு என்றும் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றம் சாட்டி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மேற்குலகம் ஏன் இஸ்ரேல் அணு ஆயுதம் வைத்திருப்பதை தடை செய்ய மறுக்கின்றன? என்று சமீபமாக சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கேள்வி எழுப்பினார்....

இஸ்ரேல் 200 அதிகமான அணு ஆயுதம் வைத்திருப்பதாகவும் மத்திய கிழக்கு நாடுகளில் அது மட்டுமே அணு ஆயுதம் வைத்திருப்பதாக அனைவரும் அறிந்த ஒன்று என்றும் கூறியுள்ளார்.


மேலும் அங்காரா மற்றும் டெல் அவிவின் மத்தியில் உள்ள உறவு தேய்ந்து வருவதாகவும் தெரிவித்தார். டெல் அவிவின் காசா பகுதிக்கான தடையை உடைக்கும் விதமாக நிவாரண பொருட்கள் எடுத்து சென்ற ப்ளோடில்லா கப்பலை இஸ்ரேல் தாக்கி அதில் சென்ற துருக்கியின் ஒன்பது சமூக ஆர்வலர்களை இஸ்ரேல் கொன்றது. அத்தாக்குதலில் 12 க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.


மேலும் இந்நிகழ்வைத் தொடர்ந்து இஸ்ரேல் தனது நடவடிக்கைக்கு மன்னிப்பு கோர மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து துருக்கி இஸ்ரேலுக்கான தூதரை இஸ்ரேலுக்கு அனுப்பியதுடன் இஸ்ரேலுடனான ராணுவ தொடர்புகளையும் நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!