ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அழிப்பதே பெரும்பாண்மை கட்சிகளின் நோக்கமாகும் அதற்காகவே சிலரை பிரித்தெடுத்து அமைச்சுப் பதவிகளையும் அபிவிருத்திகளையும் வழங்கினர். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் கூறினார்.
சாய்ந்தமருது கடற்கரையில் நேற்று இரவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டமொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தவிசாளர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் அங்கு கருத்துத்தெரிவிக்கையில்...
ஏவப்படாமல் சும்மா இருக்கும் ஏவுகணையைவிட வீட்டடிலே சுவரில் அடிக்கப்பட்டிருக்கும் ஆணி மேலானது என்ற செய்தியை வேட்பாளர்கள் எல்லோருக்கும் சொல்ல விரும்புகிறேன்.
பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது அப்பதவிக்காகத்தான் ஆனால் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் அவ்வாறில்லை மேயர் அல்லது சேமனாக வேண்டும் என்றுதான் போட்டியிடுவார்கள். இங்கு 25 வேட்பாளர்களில் யாரும் உறுப்பினராகுவது நோக்கமல்ல எல்லோரும் மேயராககுவதே. இது பிழையுமல்ல. ஆனால் வரலாற்றை சற்று பின்நோக்கிப் பார்க்கவேண்டும்.
யாரும் சாய்ந்மதருது மக்களை ஏமாற்றிவிட முடியாது. அக்கரைப்பற்றை ஓருவர் ஏமாற்றினார் சாய்ந்மதருதை பலரும் ஏமாற்றினார்கள் மட்டக்களப்பில் மூன்று கிராமங்களையும் மூன்று பேர் ஏமாற்றினார்கள் பல சிறிய முஸ்லிம் கிராமங்களை ஒருவர் ஏமாற்றினார். ஆனால் அமைச்சுப்பதவியைக் கொடுத்து எந்த கொம்பனாலும் ஆளும்கட்சியைக் கொண்டு வந்து சாய்ந்தமருது மக்களின் தலையில் மிளகாய் அரைக்க முடியாது என்பதே வரலாறாகும்.
தனி நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊர் அல்ல இந்த ஊர் இந்தக்கட்சிக்கு முதன்மையை வழங்கிய ஊராகும். எந்த வேட்பாளரும் தையிரியமிருந்தால் சொல்லடடும் நான் முஸ்லிம் காங்கிரஸில் மரச் சின்னத்தில் போட்டியிடாது வேறு எந்தக்கட்சியின் சின்னத்திலாவது போட்டியிட்டு வென்று மேயராகுவேன் என்று சொல்லட்டும். என்று நான் கேட்க விரும்புகிறேன்.
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட எந்த ஒரு வீதியிலோ அல்லது மூலை முடுக்கிலோ சரி எந்தக்கட்சிக்கும் கூற முடியாது அவர்களின் கட்சியை வெற்றிபெறவைத்தோம் என்று ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சொல்லும் வெற்றி பெற்றோம். கல்முனை மாநகர சபையின் மேயராக்கினோம். பஷீர் அவர்களை பிரதி மேயராக்கினோம் ஹரிஸ் அவர்களை அம்பாறை மவாட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக்கினோம். இத்தர்தலிலும் வெற்றி பெறுவோம் இதுதான் எமது கட்சியின் தனிப்பெறும் திறமை தனிப்பெரும் தன்மையாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் பற்றிப் பேசுவதற்காகத்தான் நாங்கள் வந்துள்ளோம். முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை தரிவு செய்யும் எல்லோரும் மேயராகுவதற்காக தர்தல் கேட்கிண்றார்கள் என்று சொன்னேன். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் ஆணையை மீறி எவர் எந்த தனி நபரையும் மேயராக நியமிக்கமாட்டாது என்ற உத்தரவாதத்தை நான் இவ்விடத்தில் தருகிறேன்.
ஆனால் மக்களுடைய ஆணையை முஸ்லிம் காங்கிரஸ் திருத்திய வரலாறும் உண்டு. அது மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் இருந்த போது இந்நிலைமை இருந்தது. அக்காலத்தில் வாக்குகள் குறைவாக எடுத்தவர்களும்; மேயராகவும் தவிசாளராகவும் நியமிக்கப்பட்ட வரலாறு இருக்கிறது அது அந்தத்தலைவர் காலத்தில் எடுத்த முடிவு. ஆனால் இந்தத்தலைவர் காலத்தில் அப்படி நடக்கமாட்டாது மக்களின் ஆணையை மதித்தே ஆகுவோம். எதிரே வரும் 9ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த மாநகர சபையை ஆகக் குறைந்தது 12 உறுப்பினர்களைப் பெற்று கைப்பற்றியே தீரும்.
அதில் மேயராக இருப்பது யார் என்பதை தீர்மாணிப்பது வாக்குகளின் எண்னிக்கையே அன்றி வேறு எதுவுமில்லை என்பதை மிகத் தெளிவாக கூறவிரும்புகிறேன்.
சாய்ந்மருது என்று கல்முனை என்று மருதமுனை என்று நற்பட்டிமுனை என்று நங்கள் முஸ்லிம் காங்கிரஸ் பிரித்துப்பார்ப்பதில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாகும் போது முஸ்லிம்களின் இரத்தம் வீதியிலே பெறருக்கெடுத்த காலம் முஸ்லிம்களின் தலைகள் வயல் வரம்புகளிலே புதைக்கப்பட்ட காலம் முஸ்லிம்கள் அடித்து வெளியேற்றப்பட்ட காலம் இப்படி முஸ்லிம்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்ட அந்தக்காலத்தில் முஸ்லிம்களின் பாதுகாப்பு கவசமாக உருவாக்கப்பட்டதுதான் முஸ்லிம் காங்கிரஸ். தவிர யாருக்கும் தலையிலே முடியை வைப்பதற்கும் மணி மகுடம் சூட்டுவதற்கும் உருவாக்கப்பட்ட கட்சி அல்ல இந்த முஸ்லிம் காங்கிரஸ்.
முஸ்லிம் சமுதாயத்தின் கழுத்துக்கு வந்த வாளின் கேடயமாக வந்ததுதான் முஸ்லிம் காங்கிரஸ். முஸ்லிம் சமுகத்தின் நெஞ்சுக்கு நேரே நிறுத்தப்பட்ட துப்பாக்கிகளை தடுக்கின்ற வலிய கரமாக வந்ததுதான் முஸ்லிம் காங்கிரஸ். இன்று முதல் கடமை முடியவில்லை. தெளிவாக புரிய வேண்டும் முஸ்லிம் காங்கிரஸின் தோற்றம் அதன் வரலாறு எப்படி உருவாகியது என்பதெல்லாம் தொரியும். இடையிலே வந்த நாடகங்களும் தொரியும் யாரும் அபிவிருத்தி செய்யலாம். முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிய வேண்டும். ஒரே நிபந்தனைதான் எந்த பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சராகலாம் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிய வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸை அழிக்க வேண்டும். முஸ்லிம்களின் குரலை விலாசத்தை முகவரியை அழிக்க வேண்டும் அதற்கு அபிவிருத்திப் பேரம் பேசப்பபட்ட வரலாறுதான் அபிவிருத்தியின் வாரலறு. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அபிவிருத்தியை வெறுத்ததல்ல அபிவிருத்தியும் செய்தது முஸ்லிம் காங்கிரஸ். ஆனால் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் மரணத்தின் பின்பு முஸ்லிம் சமுதாயத்தின் முகவரியை அழிப்பதற்கு பேரம் பேசப்பட்ட விடயம் அபிவிருத்தி என்பதபகும். இங்கு அபிவிருத்தி என்பதையும் அமைச்சுப்பதவிகள் என்பதையும் காட்டி அரசாங்கம் முஸ்லிம் சமுகத்தின் முகவரியாக பாதுகாப்புக் கவசமாக இருக்கின்ற முஸ்லிகளின் ஏகபோக குரலாக இருக்கின்ற முஸ்லிம் சமுகத்திற்காக போராடுகின்ற இந்தக்கட்சியை அழிக்க முற்பட்ட போதல்லாம் பேரம் பேசப்பட்டது அபிவிருத்திதான்.
எனவேதான் கடந்த 30 ஆண்டுகளாக கட்டிக்காத்த இந்தக்கடசியின் கொள்கைகளை காப்பற்றி இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்வேண்டும். தனி நபர்கள் சண்டையிட்டுக் கொள்வதற்காக அல்ல இக்கட்சி மறைந்த தலைவரின் தியாகத்தை கனவை நினைவாக்க அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம். என்றார்.
1 கருத்துரைகள் :
காங்கிரசைஅதில் உள்ளவர்கள்தான் அழிக்கப்பார்க்கின்றார்கள்,
Post a Comment