September 18, 2011.... AL-IHZAN World News
காஷ்மீரி மாணவர் ஒருவர் தாடி வைத்திருந்த காரணத்தால் பல்கலைகழக விடுதியில் சக மாணவர்களால் வேதனை செய்யப்பட்டதுடன் திருட்டு மற்றும் தீவிரவாதம் என்ற பெயரில் ஆறு மணி நேரம் விசாரணை செய்யப்பட்டுள்ளார்.
குர்ஷீத் அஹ்மத் வணி என்ற கஷ்மீரைச் சேர்ந்த மாணவர் போபால் பர்கதுல்ல பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். அவர் தாடி வைத்திருந்ததின் காரணமாக அவருடன் படிக்கும் சக மாணவர்கள் பல்கலைக்கழக விடுதியில் தொடர்ந்து கேலி செய்து அவரை துன்புரித்தியுள்ளனர். எனவே குர்ஷீத் விடுதியில் தங்க மனம் இல்லாமல் விடுதியை காலி செய்துவிட்டு வெளியில் சென்றுள்ளார்...
விடுதியில் கட்டியிருந்த பணத்தை திரும்ப பெறுவதற்காக அவர் காசோலையுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக வங்கி சென்றுள்ளார். சென்ற மாதம் ஆந்திர வங்கியில் திருட்டு நடந்துள்ளமையால் போலீசாரால் வரையப்பட்டிருந்த படமும் இவரது தாடியும் ஒரே மாதிரியாக இருக்கிறது என்று வங்கியின் காவலாளி போலீஸிற்க்கு தகவல் கொடுத்துள்ளார்.
எனவே போலீஸ் அவரை பக் செவனியா காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று ஆறு மணி நேரம் துருவி துருவி விசாரித்துள்ளனர். குர்ஷீத் துன்புறுத்தப் பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுப் பற்றி காவல்துறை அதிகாரி எ.பி.சிங் கூறுகையில் சந்தேகப்படும் படி குர்ஷீத் இருந்ததால் விசாரணை செய்தோம் பிறகு அவர் அப்பாவி என்று தெரிந்ததால் விடுதலை செய்து விட்டோம் என்று கூறியுள்ளார். மேலும் குர்ஷீத் துன்புறுத்தப் பட்டாரா என்று கேட்டதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
போலீஸ் ஆறு மணி நேரம் விசாரித்ததில் குர்ஷீத் கடுமையான பயத்தில் உள்ளார். மேலும் தன்னை சக மாணவர்கள் தாடி வைத்திருப்பதற்காக கேலி செய்வதால் தான் விடுதியில் தங்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
0 கருத்துரைகள் :
Post a Comment