animated gif how to

ஆயுதப் போராட்டத்தை நோக்கி ஜே.வி.பி. நகர்வு - பேராசிரியர் திஸ்ஸ விதாரண

September 23, 2011 |

September 23, 2011.... AL-IHZAN Local News

இலங்கையின் முக்கியமான எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பிக்குள் உட்கட்சி முரண்பாடு உக்கிரமடைந்துள்ளது. ஜே.வி.பியின் தலைமைத்துவத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முனைப்புக்களில் கட்சியின் மாற்றுக் கொள்கையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

குறிப்பாக கட்சித் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் தரப்பினருக்கும், சிரேஸ்ட உறுப்பினர் பிரேம்குமார் குணரட்னம் தரப்பினருக்கும் இடையில் கடுமையான முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிணக்குகளுக்கு தீர்வு காணும் நோக்கில் நீதிமன்றின் உதவி நாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜனாதிபதித் தேர்தில் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளித்தமை, யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல் வெளியிடப்பட வேண்டுமென நடத்தப்பட்ட போராட்டங்கள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் வெடித்துள்ளன...


இதேவேளை மற்றுமொரு ஆயுத போராட்டத்தை நோக்கி ஜே.வி.பி கட்சி நகர்வதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஜே.வி.பி நடத்திய ஆயுத போராட்டத்தில் ஆயிரக் கணக்கான இளைஞர் யுவதிகளின் விலைமதிப்பற்ற உயிர்கள் காவு கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். 

இவ்வாறான ஆயுத போராட்டத்தின் மூலம் முதலாளித்துவ சமூகமே நன்மைகளை அடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை சீர் குலைக்கும் நோக்கில் சிலர் ஜே.வி.பி.யை வன்முறைப் பாதைக்கு இட்டுச் செல்ல முயற்சிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். 

ஆயுத போராட்டம் வெடித்தால் அதனை தடுப்பதற்கு படையினரை மீள நிலைநிறுத்த நேரிடும் எனவும், இதனால் நாட்டின் அபிவிருத்திப் பணிகள் பாதிக்கும் எனவும், ஜே.வி.பி கட்சி தொடர்ந்தும் ஜனநாயக நீரோட்டத்தில் தனது பயணத்தை முன்னெடுக்கும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!