September 29, 2011.... AL-IHZAN Local News
ஏ.அப்துல்லாஹ்: நாட்டில் அலிலுள்ள முஸ்லிம் காதி சிவில் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் சிபார்சு செய்வதற்கென நியமிக்கப்பட்ட குழுவின் சிபார்சுகள் ஓரு வாரங்களில் நீதியமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளன என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெவித்தார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடந்த புதன்கிழமை கொழும்பு பிரதேச மஸ்ஜிதுகளின் கதீப் மார்கள் , மத்ரஸாகளின் உஸ்தாத்மார்களையும் , உலமாக்ளையும் தனது அமைச்சின் கேட்போர் கூடத்தில் சந்தித்து கலந்துரையாடினார் இக்கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்...
முஸ்லிம் காதி சிவில் சட்டத்தில் திருத்தும்
அமைச்சர் ஹக்கீம் தொடர்ந்தும் கருத்து தெவிக்கையில், “முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய கோக்கைகள் முன்வைக்கப்பட்டமையால் நீதிபதிகள், சட்டத்தரணிகள், உலமாக்கள், புத்திஜீவிகள் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அக்குழுவின் சிபார்சுகள் கையளிக்கப்பட்டதும் சட்டத்தில் திருத்தங்களை உள்வாங்குவதற்கான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நாட்டில் தற்போது 65 காதி நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்நீதிபதிகளின் நியமனங்கள் நீதிச்சேவை ஆணைக்குழுவினாலேயே வழங்கப்படுகின்றன. ஏனைய நீதிபதிகளுக்குப் போன்றே இவர்களது ஒழுக்காற்று நடவடிக்கைகளும் ஆணைக்குழுவினாலேயே மேற்கொள்ளப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
முஸ்லிம் காதி நீதிமன்றங்களுக்கு நிரந்தரக் கட்டிடங்கள் பல பூர்த்தி
காதி நீதிமன்றங்கள் தற்போது தனியார் கட்டிடங்களில், பாடசாலைகளில், மஸ்ஜிதுக்களின் இயங்கி வருகின்றன. தற்போது முஸ்லிம் காதி நீதிமன்றங்களுக்கு நிரந்தரக் கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. கிழக்கில் பல புதிய காதி நீதிமன்றக் கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. காத்தான்குடி, அக்கரைப்பற்று, கிண்ணியா காதிநீதிமன்றக் கட்டிடங்கள் விரைவில் திறந்து வைக்கப்படும். அடுத்த வருடம் மேலும் 14 நீதிமன்றக் கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படும்.
முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கையாள புதிய வலையமைப்பு
முஸ்லிம்கள் தற்போது நாட்டில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு சுகமான முறையில் தீர்வுகள் பெற்றுக் கொள்வதற்காக பள்ளிவாசல்கள், பாடசாலைகள், சமூகநல அமைப்புகள் என்பன ஒன்றிணைந்து மாவட்டரீதியில் வலையமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும். இதற்கு உலமாக்களும் புத்திஜீவிகளும் முன் வரவேண்டும். முதல் வலையமைப்பு கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டு நாடெங்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். இவ்வாறான அமைப்பின் மூலம் சமூகங்களுக்கிடையில் நல்லுணர்வையும் பேணக் கூடியதாக இருக்கும். என்றும் தெரிவித்தார்.
மஸ்ஜித் ஊழியர்களுக்கு தொழிலில் உத்தரவாதமும் ஓய்வூதியத் திட்டமும்
பள்ளிவாசல்களில் கடமை புரியும் கதீப், மூஅத்தின்கள் தங்களது தொழிலில் உத்தரவாதமின்றியே கடமையாற்றி வருகின்றனர். அவர்களது பதவிகள் நிரந்தரமானதாக இல்லை. அவர்களுக்கென்று ஒரு ஓய்வூதியத் திட்டம் வகுக்கப்பட வேண்டும். சட்ட ரீதியாக இத்திட்டத்தை வகுக்க மூடியாது போனாலும் தனியார் ஓய்வூதியத் திட்ட நிதியமொன்றினை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.முஸ்லிம் சமய கலாசாரத்துக்குப் பொறுப்பான அமைச்சர் ஓய்வூதியம் பெற்றுக் கொடுப்பதற்காக ஒழுங்கு விதிகளை மேற்கொள்ள முடியும்.
முஸ்லிம்கள் அவ்வப் போது பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்தாலும் நாம் இந்நாட்டில் நடுநிலைச் சமூகமாகவே இருந்து வருகிறோம். எமக்கு இந்- நாட்டில் மதச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் 2600 மஸ்ஜிதுகளை நாம் கொண்டுள்ளோம். 2000க்கும் மேற்பட்ட மத்ரஸாக்கள் இயங்கி வருகின்றன. 190 அரபுக் கல்லூகள் உள்ளன. 100ற்கு மேற்பட்ட இஸ்லாமிய சர்வதேச பாடசாலைகள் கல்வி போதிக்கின்றன.
முஸ்லிம்கள் ஆக்கிரமிக்க வந்தவர்கள், சுரண்டிப் பிழைப்பவர்கள் என்றெல்லாம் தற்போது குற்றச்சாட்டப்படுகிறது. இந்தப் பிரசாரங்களை நிராகரிப்பதற்கு எமக்குள்ள சக நல்லுணர்வு பேணப்பட வேண்டும். ஏனைய சகங்களுக்கிடையில் நல்லுணரவுகளை வளர்ப்பதற்கு நாம் உருவாக்கும் வலைப்பின்னல்கள் நிச்சயம் உதவும்.
எமது பள்ளிவாசல் நிர்வாகங்களிடையேயும் தற்போது நிர்வாகப் போட்டிகள் உருவாகியுள்ளன. வக்புசபையில் முறைப்பாடுகள் குவிந்த வண்ணள்ளன.பள்ளிவாசல் நிர்வாகங்கள் போட்டிகளைத் தவிர்த்து பிரதேச மக்களின் நலனுக்கு உழைக்க வேண்டும். சமாதான சூழ்நிலைகளைத் தோற்றுவிக்க வேண்டும் என்றார்.
வைபவத்தில் அகில இலங்கை காதீப், அத்தின் இயக்கத்தின் தலைவர் அப்துல் ஜப்பார், ஸ்ரீ லங்கா ஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான அஷ்ஷெய்க் எஸ். எல். எம். ஹனீபாவும் உரையாற்றினர்.
தகவல்: Lankamuslim

0 கருத்துரைகள் :
Post a Comment