சுற்றுலா பயணிகளாகவும் வர்த்தக நோக்கங்களுக்காகவும் இலங்கை வரும் வெளிநாட்டினருக்கு ‘Online’ ஊடாக வீசா வழங்கும் www.eta.gov.lk என்ற இணையத் தளம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பாதுகாப்பு அமைச்சும், குடிவரவு குடியகல்வு திணைக்களமும், இலங்கை சுற்றுலாச் சபையும் இணைந்து இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 78 நாடுகளுக்கும் இந்த இணையத் தளத்தை அறிமுகப் செய்கிறது.
சுமார் 30 தினங்கள் வரையிலான குறுகிய காலம் இலங்கையில் சுற்றுலா பயணிகளாகவோ, வர்த்தக நோக்கங்களுக்காகவோ வரும் வெளிநாட்டவர் ‘Online’ ஊடாக பயண அனுமதியை பெறுவதற்கான சரியான திகதி அறிவிக்கப்படும் என குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் பிரதான கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்தார்...
‘Online’ மூலமாக பயண அனுமதியை பெறும் நடைமுறையை ஊடகங்களுக்கு விளக்குவதற்காக கொழும்பு கொண்டினண்டல் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பின் போதே சூலானந்த பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தியா, பாகிஸ்தான் உட்பட 78 நாடுகளிலிருந்தும் ‘On line’ மூலமாக விண்ணப்பிப்பவர்கள் 50 முதல் 75 டொலர்கள் வரை விண்ணப்ப சேவைக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பப் படிவம் ‘On line’ ஊடாக அனுப்பிய 24 மணி நேரத்துள் விண்ணப்பதாரிக்கு அவர் விரும்பியவாறு Fax அல்லது ஈமெயில் அல்லது குறுந்தகவல் (எஸ். எம். எஸ்.) மூலம் அனுமதி கிடைக்கும். கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெறும் வைபவத்தின் போது www.eta.gov.lk என்ற இணையத் தளம் இலங்கையிலுள்ள அனைத்து வெளிநாட்டு இராஜதந்திரிகளினதும் முன்னிலையில் அறிமுகம் நாளை செய்யப்படவுள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment