animated gif how to

கண் விழித்த முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் என்கிறது

September 16, 2011 |

September 16, 2011.... AL-IHZAN Local News

அநுராதபுரம் பழைய நகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒட்டுப்பள்ளம் செய்கு சிக்கந்தர் ஒலியுல்லாஹ் அப்பா அவர்கள் அடக்கியுள்ளதாக கூறப்படும் தர்கா சுமார் 400க்கு மேற்பட்ட சாதாரண உடை மற்றும் காவியுடை தரித்த குழுவினரால் உடைத்துத் தரை மட்டமாக்கப்பட்டிருக்கும் சம்பவம் இனங்களின் ஐக்கியத்துக்கும் சிறுபான்மையினங்களின் இருப்புக்கும் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாக தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் பிரதி அமைச்சருமான பஷீர் சேகுதாவூத், இச்சம்பவம் குறித்து தானும் ஸ்ரீல.மு.கா.வும் மிகுந்த கவலையையும் விசனத்தையும் அடைந்துள்ள நிலையில் இதனை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.படங்கள்
பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத் மேலும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இச்சம்பவம் குறித்து அநுராதபுர முஸ்லிம்கள் மாத்திரமன்றி நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் அதிர்ச்சியும் கவலையும் கொண்டுள்ளனர். இச்சம்பவத்தின் பின்னால் நிற்கும் சக்தி எது? யார் இவற்றுக்கு பொறுப்பு எனத் தெரியாது அச்சம் கொண்டுள்ளனர். 


இச்சம்பவம் நடைபெறும் வேளையில் சம்பவ இடத்துக்குச் சென்று தர்காவைப் பாதுகாக்க முயன்ற முஸ்லிம் மக்களை பொலிஸார் அங்கு செல்லவிடாமல் தடுத்துள்ளனர். அநுராதபுரம் புனித நகராக பிரகடனப்படுத்தப்பட்ட எல்லைக்குள் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகாமல் இந்த தர்கா அமைக்கப்பட்டுள்ளது. 
படங்கள்: Lankamuslim
இதற்கு முன்பும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அநுராதபுரம் பழைய நகர (குருநாகல் சந்திப்) பகுதியில் பரம்பரையாக வசித்து வந்த முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் இருந்த பள்ளிவாசலொன்றும் இவ்வாறே 2008 மே மாதம் 15 ஆம் திகதி புல்டோசர் இயந்திரத்தினால் தரைமட்டமாக்கப்பட்டது.


இப்போது நடைபெற்றிருப்பது போன்று இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடைபெற இடமளிக்கப்படக்கூடாது என அரசாங்கத்துக்கும் பாதுகாப்புக்குப் பொறுப்பான தரப்பினருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்துகிறது. 


நடைபெற்றிருக்கும் இச்சம்பவமானது இந்நாட்டின் மீது அரபு முஸ்லிம் நாடுகள் கொண்டிருக்கும் நல்லபிப்பிராயங்களுக்கும் சிறுபான்மை மக்கள் மீதான பெரும்பான்மையின மக்களின் நல்லபிப்பிராயங்களுக்கும் பெரும்பான்மையின மக்கள் மீதான சிறுபான்மையின மக்களின் நல்லபிப்பிராயங்களுக்கும் மதச் சகிப்புத் தன்மைக்கும் மோசமான பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. 


எனவே ஜனநாயக விழுமியங்களை மதித்து, அரசாங்கம் இவ்விடயத்தில் நேரடியாக முஸ்லிம்களுக்கு நியாயமானதும் நீதியானதுமான தீர்வை உடனடியாகப் பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

2 கருத்துரைகள் :

Mca Fareed said...

முஸ்லிம் காங்கிரசுக்கு அறிக்கைமட்டும் விடத்தான் தெரியும் என்றால் நமக்கு அப்படி ஒன்று தேவைதானா

RUSTHY MMM said...

முஸ்லிம் காங்கிரஸ் அறிக்கையாவதுவிடுகிறது வேறு எந்த முஸ்லிம்கட்சியாவது அறிக்கையாவது விர்ரதா இல்லையே!தற்போதய காலகட்ட அரசியல் மறைந்ததலைவர் மர்ஹும் MHM அஷ்ரப்அவர்களின் காலகட்ட அரசியலுடன் ஒப்பிட முடியாதுதான் அதேநேரம் தற்போதய சிங்கள தலைமையினைப்பற்றியும் சிந்திக்கவேண்டியுள்ளது!

Post a Comment

Flag Counter

Free counters!