September 18, 2011.... AL-IHZAN Local News
அளவ்வையில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. சம்பவத்தில் 25 பேருக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில், 18 பேர் மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதேவளை இந்த விபத்து குறித்து ஆராய விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலும் பொல்காவையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலும் அம்பேபுஸ்ஸ நோக்கி பயணித்த ரயிலுமே ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டது.
0 கருத்துரைகள் :
Post a Comment