September 28, 2011.... AL-IHZAN India News
2. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
3. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா
4. இந்தியன் நேஷனல் லீக்
5. சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை
6. தேசிய லீக் கட்சி
7. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
8. ஜம்மியதுல் உலமாயே ஹிந்த்
9. ஆல் இந்தியா மில்லி கவுன்சில்
10. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்
11. ஷரிஅத் பாதுகாப்பு பேரவை
12. வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா
13. இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம்
14. இஸ்லாமிய இலக்கிய கழகம்
இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளுடன் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வரும் உள்ளாட்சி தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. இதற்காக 14 இஸ்லாமிய கட்சிகள் மற்றும் 6 கிறிஸ்தவ அமைப்புகளுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி தனி அணி அமைத்துள்ளது.
அரசியல் கட்சிகளின் முடிவுகள் வரும் உள்ளாட்சி தேர்தல் முந்தைய தேர்தல்களைவிட தனித்து முக்கியத்துவம் பெற்றதாக ஆக்கி வருகிறது. ஆளும் அதிமுக கூட்டணியிலுள்ள கட்சிகளை முதல்வர் ஜெயலலிதா கண்டுகொள்ளாமல், போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை அறிவிக்கத் துவங்கியதிலிருந்து உள்ளாட்சி தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.
இதற்கிடையில் உள்ளாட்சி தேர்தலைத் தனியாக சந்திக்கப்போவதாக திமுக அதிரடியாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து திமுக அணியிலுள்ள காங்கிரஸ், அதிமுக அணியிலிருந்த தேமுதிகவைத் தன்பக்கம் இழுத்து மூன்றாவது அணி அமைக்க முயற்சி செய்தது...
ஆனால் அதற்குப் பிடிகொடுக்காத தேமுதிக தலைவர் விஜயகாந்த், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து தனி அணி அமைத்தார். இதற்கிடையில் பாஜக, கொங்கு முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்துக் கொண்டது.
இந்திய முஸ்லிம் லீக் கட்சியினரும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தனர். அதே போன்று அதிமுக அணியிலிருந்த மனித நேய மக்கள் கட்சியும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது.
இவ்வாறு, அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, பாஜக கூட்டணி, தேமுதிக கூட்டணி, முஸ்லிம் லீக், மமக என போட்டியிடும் கட்சிகள் எண்ணிக்கை பிரிந்து அதிகரித்த நிலையில், கம்யூனிஸ்ட், மதிமுக, பாமக போன்றவர்களோடு மூன்றாவது அணி அமைக்க முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி, இறுதியில் 14 முஸ்லிம் கட்சிகள் மற்றும் 6 கிறிஸ்தவ அமைப்புகளுடன் இணைந்து தனி அணி அமைத்துள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்த அணியில்,
1. தமிழ் நாடு ஜமாத்துல் உலமா சபை2. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
3. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா
4. இந்தியன் நேஷனல் லீக்
5. சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை
6. தேசிய லீக் கட்சி
7. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
8. ஜம்மியதுல் உலமாயே ஹிந்த்
9. ஆல் இந்தியா மில்லி கவுன்சில்
10. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்
11. ஷரிஅத் பாதுகாப்பு பேரவை
12. வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா
13. இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம்
14. இஸ்லாமிய இலக்கிய கழகம்
ஆகிய 14 முஸ்லிம் கட்சிகள் அடங்கிய அமைப்பும், 6 கிறிஸ்துவ கட்சிகள் அடங்கிய அமைப்பும் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இடம் பெற்றுள்ளன.
விடுதலை சிறுத்தைகள், இஸ்லாமிய அமைப்புகள், கிறிஸ்தவ அமைப்புகளுக்கிடையில் ஏற்பட்ட தொகுதி உடன்பாட்டைத் தொடர்ந்து, மொத்தமுள்ள 9 மாநகராட்சி மேயர் பதவிகளில், சென்னை உள்பட 3 மாநகராட்சிகள் இஸ்லாமிய கூட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 மாநகராட்சிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும்.
நகராட்சி, பேரூராட்சி, கவுன்சிலர் மற்றும் வார்டுகளில் யாருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறதோ அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது எனவும் அவர்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment