animated gif how to

சவூதி ஆரேபிய பெண்கள் கார் ஒட்டலாம் - புரட்சியை தடுத்தார் மன்னர் அப்துல்லா

September 28, 2011 |

September 28, 2011.... AL-IHZAN World News

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிக்கப்பட உள்ளது.   சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஓட்டுரிமை கிடையாது. கார் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. 

இந்த நிலையில் அரபு நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். அதே நிலை சவுதி அரேபியாவிலும் ஏற்படாமல் தடுக்க மன்னர் அப்துல்லா அரசியல் சட்டத்தில் மறு சீரமைப்பு செய்துள்ளார். அதன் முதல் கட்டமாக பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்துள்ளார். வருகிற 2015-ம் ஆண்டு நடைபெற உள்ள நகராட்சி தேர்தலில் அவர்கள் ஓட்டு போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ள விவகாரம் தற்போது முக்கிய பிரச்சினையாக எழுந்துள்ளது. அதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தடை இருந்தபோதும் அதை எதிர்த்து பெண்கள் கார் ஓட்ட தொடங்கியுள்ளனர். அதற்கு விதிக்கப்படும் அபராதம் மற்றும் ஜெயில் தண்டனையை ஏற்க தயாராகி விட்டனர்...

அதை தொடர்ந்து பெண்கள் கார் ஓட்ட அனுமதிப்பது என மன்னர் அப்துல்லா முடிவு செய்துள்ளார். அதற்கான சட்ட திருத்தம் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்படு வதை உலக நாடுகள் வரவேற்றுள்ளன. எனவே, பெண்களுக்கு எதிரான அனைத்து தடைகளையும் நீக்க மன்னர் அப்துல்லா முடிவு செய்துள்ளார்.
News: (மாலை மலர்)

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!