animated gif how to

அமெரிக்கா மீதான தக்குதலுக்கு அதன் மத்திய கிழக்கு கொள்கையே காரணம்

September 10, 2011 |

September 10, 2011.... AL-IHZAN World News

செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு மத்திய கிழக்கின் மீதான அமெரிக்காவின் கொள்கைகளே காரணமென 43 வீதமான அமெரிக்கர்கள் கருதுவதாக புதிய ஆய்வொன்று தெரிவிக்கின்றது.
கடந்த தசாப்த காலத்தில் அமெரிக்கர்களின் மனோ நிலையில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றத்தைப் பிரதிபலிப்பதாக இவ் ஆய்வு முடிவுகள் அமைந்துள்ளன.


பியு ஆய்வு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆய்வில், ஏன் அவர்கள் எம்மை வெறுக்கிறார்கள்? என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள அமெரிக்கர்களின் கருத்துகளில் அதிகளவான வேறுபாடுகள் நிலவுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஏனைய நாடுகளுடன் அமெரிக்கா கடைப்பிடித்த தவறான கொள்கைகள் இத் தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாமென்ற கூற்றை 43 சதவீதமானோர் ஆதரித்துள்ளனர். அதேவேளை 45 வீதமானோர் நிராகரித்துள்ளனர். இதேவேளை 9/11 தாக்குதலின் பின்னர் உடனடியாக நடத்தப்பட்ட ஆய்வில் முன்வைக்கப்பட்ட அதேபோன்றதொரு கூற்றை 3 வீதமானோர் மட்டுமே ஆதரித்திருந்த நிலையில் 55 வீதமானோர் நிராகரித்துள்ளனர்...
இதேவேளை, இக் கேள்விக்கான பதிலில் ஒவ்வொரு தலைமுறைகளுக்கிடையிலும் மிகப்பெரிய வேறுபாடுகள் நிலவுகின்றமையும் இவ் ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கைகளே இத் தாக்குதலுக்கான காரணமாக இருக்கலாமென்ற கருத்தை 30 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களில் 52 வீதமானோர் ஆதரித்துள்ள அதேவேளை 6065 வயதுக்குட்பட்டோரில் 20 வீதத்தினர் மட்டுமே இக் கருத்தை ஆதரித்துள்ளனர்.


இதேவேளை 9/11 தாக்குதல் அமெரிக்காவின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தாம் கருதுவதாக பத்தில் ஆறு பேர் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!