September 07, 2011.... AL-IHZAN World News
பாக்தாத்:கடந்த 2003 முதல் 2010-ம் ஆண்டு வரை ஈராக்கில் நடந்த குண்டுவெடிப்புகளில் சுமார் பன்னிரெண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களும், இருநூறுக்கும் மேற்பட்ட நேட்டோ படைவீரர்களும் பலியாகியுள்ளதாக புதிய அறிக்கையொன்று கூறுகின்றது.
லண்டனை சேர்ந்த “தி லன்செட்” என்ற மருத்துவ பத்திரிகை இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 1,000 தற்கொலைப்படை குண்டுவெடிப்பிற்கு சுமார் 12,284 பொதுமக்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இருநூறுக்கும் மேற்பட்ட நேட்டோ வீரர்கள் கொல்லப்பட்டதில், சுமார் 175 அமெரிக்க வீரர்களாவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
RSS Feed
September 07, 2011
|




0 கருத்துரைகள் :
Post a Comment