animated gif how to

9/11 தாக்குதலைக் குறித்து புஷ் பொய் கூறியுள்ளார் – மகாதிர் முஹம்மது

September 12, 2011 |

September 12, 2011.... AL-IHZAN World News

முன்னால் மலேசிய பிரதமரான மகாதிர் முஹம்மது தன்னுடைய சொந்த வலைப்பூவான செதேட்டில், மன்ஹாட்டன் நகரில் இருந்த இரட்டை கோபுரம், நியூயார்க் நகர், பெண்டகன் மற்றும் விர்ஜினியாவில் நடத்தப்பட்ட 9/11  தாக்குதல்களை நடத்தியது முஸ்லிம்கள் அல்ல என்றும் இத்தாக்குதல் குறித்து அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ் பொய் கூறியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது; 9/11 தாக்குதலில் கொல்லப்பட்ட 3000 மக்களின் மரணத்தை நினைத்து அச்சம் கொள்வதைவிட அதை நடத்தியது அமெரிக்க அரசு என்பதில்தான் அச்சப்பட வேண்டியுள்ளது.
அரப் முஸ்லிம்கள் தங்களின் உயிரை தியாகம் செய்ய தயாராய் இருப்பவர்கள் என்பது உண்மை என்றாலும் இவ்வளவு துல்லியமாக தாக்குதலை நடத்தக்கூடிய அளவுக்கு அவர்கள் திறமை வாய்ந்தவர்கள் அல்லர் எனத் தெரிவித்துள்ளார்...
மேலும் அவர் கூறியுள்ளதாவது; இத்தாக்குதல் நடத்த நீண்ட காலமாக திட்டமிடல் நடைபெற்று இருக்கவேண்டும். ஏனினில் ஒரே நேரத்தில் நான்கு விமானங்களை கடத்துவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல இதற்கு துல்லியமான திட்டம் அவசியம் எனவும் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்களுக்கு இவ்வளவு தொழில்நுட்பம் வாய்ந்த செயலை செய்து வெற்றிபெறுவது கடினம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இரட்டை கோபுரங்கள் இடிந்த விதத்தை பார்க்கும் பொழுது அது அருகாமையில் உள்ள மற்ற கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல் விமானம் மோதிய உடன் ஒரு கட்டிடத்தை வேண்டும் என்றே அழித்தால் எவ்வாறு இருக்குமோ அதுபோன்று கட்டுப்பாடுடன் அக்கோபுரங்கள் கீழே சரிந்ததை பார்க்க முடிந்தது என்றும் மேலும் மூன்றாவது கட்டிடமும் இதே போன்று விழுந்தது ஆனால் அதில் எந்த விமானமும் மோதவில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் பெண்டகன் தாக்குதல் குறித்து முஹம்மது தெரிவிக்கும்போது; பெண்டகனை தாக்கிய விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை மேலும் விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும் விமானத்தில் இருந்தவர்களின் உடல்கள் என்று எதுவுமே கிடைக்கவில்லை விமானம் தாக்குதலில் என்ன முழுவதுமாக ஆவியாகிவிட்டதா? என வினவியுள்ளார்.
மேலும் கடத்தப்பட்ட நான்காவது விமானம் வெறும் தரையில் மோதியதாக கூறியுள்ளனர் அதனுடைய உதிரிப்பாகங்களோ அல்லது கருப்பு பெட்டியோ அல்லது இறந்து போன பயணிகளின் உடல்களோ கிடைக்கவில்லை. அனைத்தும் என்ன மாயமாக மறைந்து விட்டனவா? எனக் கேட்டுள்ளார்.
அமெரிக்க ஊடகங்கள் ஏன் இத்தாக்குதலை குறித்து மௌனம் சாதிக்கின்றன என்றும் கேட்டுள்ளார். மேலும் புஷ்தான் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக பொய் கூறினார். புஷ்ஷின் குறிக்கோள் இராக்கையும் ஆப்கானிஸ்தான் மீதும் போர் தொடுப்பதே. இதனால் ஆயிரக்கணக்கான இராக்கிகள், ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்களும் இறந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் காயமுற்றுள்ளனர் மேலும் பலர் மன நோய்க்கு ஆளாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னால் அமெரிக்க அதிபருக்கு மனிதர்களை உயிர் மதிப்புடையது அல்ல என்று மகாதிர் முஹம்மது தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!