September 12, 2011.... AL-IHZAN Local News
மீள்குடியேற்ற அமைச்சை அடுத்த வருடம் முதல் மூடிவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளது. பெருமளவான மக்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள். எனவே அந்த அமைச்சை தொடர்ந்தும் இயக்குவது அர்த்தமற்றது என்று ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மீளகுடியேற்றப் பொறுப்புகள் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு வழங்கப்படவுள்ளன. அவ்வாறு குறித்த அமைச்சு நீக்கப்பட்டால் அமைச்சர் குணரத்ன வீரக்கோன் மற்றும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு வேறு பொறுப்புகள் வழங்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதேவேளை வடமாகாணத்தில் வாழந்துவந்த பல ஆயிரம் முஸ்லிம்கள் அரசாங்கத்தினால் மீளக்குயேற்றப்படாமல் தொடர்ந்தும் அகதி முகாம்களிலேயே மிகவும் துன்பகரமான முறையில் வாழ்கை நடத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தகது.

0 கருத்துரைகள் :
Post a Comment