animated gif how to

முஸ்லிம் பெண்களுக்கான அபிவிருத்தி ஒன்றியம் ஒழுங்கு செய்திருந்த வதிவிட செயலமர்வு

September 12, 2011 |

September 12, 2011.... AL-IHZAN Local News

முஸ்லிம் பெண்களுக்கான அபிவிருத்தி ஒன்றியம் ஒழுங்கு செய்திருந்த 2011 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றிய அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவிகளுக்கான ஆளுமை மற்றும் தலைமைத்துவ விருத்திகளை இலக்காக கொண்ட வதிவிட செயலமர்வொன்று சாய்ந்தமருதில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இடம்பெற்றது.
டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி செயலமர்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட பீடாதிபதி கலாநிதி சபீனா இம்தியாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பங்கு கொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜம் இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேக் என்.எம்.முஜீப் , டாக்டர் ஐ.எல்.எம்.றஸீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!