animated gif how to

சர்வதேச புத்தக கண்காட்சி – 2011, கொழும்பில் ஆரம்பம்

September 19, 2011 |

September 19, 2011.... AL-IHZAN Local News


கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி மிகக்கோலாகலமாக நேற்று முன்தினம் காலை பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மண்டபத்தில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவால் திறந்த வைக்கப்பட்டது. இந்தக் கண்காட்சி 17ஆந் திகதி தொடக்கம் 25ஆந் திகதி வரை நடைபெறும். இம்முறை சுமார் 450 காட்சி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல மொழிகளிலும், பல ஆயிரக்கணக்கான நூல்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
இக்கண்காட்சிகள் A. மண்டபத்தில் 80 காட்சி அறைகளும், B. மண்டபத்தில் 58 காட்சியறைகளும் கொண்டதாகவும், முன்பக்கC.மண்டபத்தில் 25 காட்சி அறைகளும் அமையப்பட்டுள்ளது.
J. K. H. S. ஆகிய மண்டபத்தில் நீண்ட காட்சி அறைகளுமாக சுமார், 450 காட்சி அறைகளில் இலங்கையின் பிரபல புத்தக சாலைகளும், பிரசுரங்களும் கண்காட்சிசாலையில் தங்களின் பிரசுரங்களை காட்சிப் படுத்தியுள்ளது.
இங்கு 40 வெளிநாட்டு புத்தகசாலைகள் தங்களின் வெளியீடுகளை காட்சிக்கு வைத்துள்ளன. பல மொழிகளிலும் பல ஆயிரக் கணக்கான நூல்களும் 155 புத்தகசாலைகளின் சுமார் 400க்கு மேற்பட்ட நூல்கள் இந்த ஒன்பது நாட்களில் வெளியிடவிருக்கின்றன.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!