September 26, 2011.... AL-IHZAN World News
போதிய சத்துணவுகள் இல்லாமல் பசியால் வாடுபவர்களைவிட, உடல் பருமன் காரணமாக இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் என சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு (ஐ.எப்.ஆர்.சி.) தெரிவித்துள்ளது.
தற்போது உலக அளவில் ஒவ்வொரு இரவும் 100 கோடி பேர் போதிய உணவு கிடைக்காமல் பசியுடன் தூங்குகின்றனர். ஆனால், சத்துணவு கிடைக்காமல் இறப்பவர்களைவிட, உடல் பருமனால் ஏற்படும் நோய் நொடிகளால் இறப்பவர்களே அதிகம்.
குறைந்தது 100 கோடி பேர் சத்துணவு கிடைக்காமல் இருக்கும்பட்சத்தில், கட்டுப்பாடற்ற முறையில் உணவு உட்கொண்டு உடல் பருமனால் தள்ளாடி நடப்பவர்கள் எண்ணிக்கை உலக அளவில் 150 கோடி. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இவர்களின் எண்ணிக்கை அதிகம் என புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது...
இது குறித்து ஐ.எப்.ஆர்.சி.யின் ஆசிய பசிபிக் இயக்குனர் ஜெகன் சாபகெய்ன் கூறுகையில், உலக அளவில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பசியால் வாடுபவர்கள் எண்ணிக்கை இந்தியா, சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம்.
ஆனால், இதே நாடுகளில் கொழுப்பு நிறைந்த பொருட்களை உண்டு உடல் பருத்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதற்கு கட்டுப்பாடற்ற உணவு முறை, ஆயத்த உணவு மற்றும் அவசர உணவுகளே முக்கிய காரணம். உடல் பருமனால் ஆண்டுக்கு 24 லட்சம் பேர் இறக்கின்றனர். இது பசி கொடுமையால் இறப்பவர்களைவிட அதிகம் என்று அவர் தெரிவித்தார்.
2 கருத்துரைகள் :
http://valaiyukam.blogspot.com/2011/09/blog-post_25.html
இந்த லிங்கை முடிந்தால் வாசித்துப் பாருங்கள்
படத்துக்கான சேதி கிடைக்கும்
subahanallah allah bless all people
Post a Comment