animated gif how to

பலஸ்த்தீன் தனிநாட்டுத் திட்டம் - இறுதி வரைவு தயார்

August 06, 2011 |

August 06, 2011.... AL-IHZAN World News

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னைக்கு சுமூக தீர்வு காணும் விதமாக , பாலஸ்தீன தனி நாடு ‌கோரிக்கை தொடர்பான வரைவு அறிக்கையினை ஐ.நா. பொதுச்சபையில் சமர்பிக்க பாலஸ்தீன அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கான வரைவு அறிக்கையினை இறுதி வடிவம் பெறப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


இஸ்ரேல்-பாலஸ்தீனத்தில் சர்ச்சைக்குரிய காஸா, மேற்கரைபகுதி, ரமல்லாஹ் உள்ளிட்ட கிழக்கு ஜெருசலம் பகுதிகளை கடந்த 1967-ம் ஆண்டு முதல் இஸ்ரேல் ஆக்கிரமித்து வருகிறது. இப்பகுதிகளில் பாலஸ்தீனர்கள் தங்களது குடியிருப்புபகுதிகளை அமைத்து தனி நாடு உரிமையினை கோரி கடந்த 44 ஆண்டுகளாக போராடிவருகின்றனர்...
இது குறித்து பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (பி.எல்.ஓ.) மூத்த உறுப்பினரும், ஐ.நாவுக்கான இஸ்ரேல்- பாலஸ்தீன அமைதி பேச்சுவார்தைக்குழு உறுப்பினருமான சாயிப்ஈர்காட் கூறியதாவது: பாலஸ்தீன தனி நாடு குறித்த இஸ்ரேலுடனான அமைதிபேச்சுவார்த்தை செப்டம்பர் மாதம் ஐ.நா.வில் துவங்குகிறது. இதற்கிடையே கடந்த இரு நாட்களாக அராப்லீக் கமிட்டியைச் சேர்ந்த உயரதிகாரிகள், இஸ்ரேலுடன் அமைதிப்பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தி வருகி்ன்றனர். எங்களது தனிநாடு கோரிக்கை இறுதிவடிவம் பெற்றுதயார் நிலையில் உள்ளது என்றார். 


முன்னதாக இந்த அமைதிப்பேச்சுவார்த்தையில் தலையிட்டு ஆலோசிக்க அமெரிக்கா என்னை அழைத்ததாக கூறப்படுவதாக வெளிவந்த செய்திகளை மறுத்தார். கடந்த ஜூலை மாதம் பாலஸ்தீனத்தின் இரு உயரதிகாரிகள் அமெரிக்கா சென்று முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினர் என்றார். பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (பி.எல்.ஓ) நிர்வாகக் குழு உறுப்பினர் அகமதுமஜ்தலானி கூறுகையில், பாலஸ்தீன விவகாரத்தில் அமெரிக்க தனது கொள்கையினை சற்று விலக்கி ஐ.நா.விடம் வலியுறுத்தி அமைதிப்பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!