animated gif how to

கிண்ணியா, மூதுர் சமுர்த்திவங்கிகளில் முன்னோடி இஸ்லாமிய வங்கிமுறை

August 06, 2011 |

August 06, 2011.... AL-IHZAN Local News
சமுர்த்தி வங்கிகளில் இஸ்லாமிய வங்கி நடைமுறையை அறிமுகப்படுத்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து அதனை உடனடியாக அமுல்படுத்தும் வகையில் கடந்த மே மாதம் விசேட குழுவொன்றையும் நியமித்துள்ளார்.

இதற்கு முன்னோடியாக தற்போது கிண்ணியா, மூதுர் பிரதேச சமுர்த்திவங்கிகளில் இஸ்லாமிய வங்கிமுறை அமுல் படுத்தப்படவுள்ளது. இதன் நடைமுறையைப் பொறுத்து நாட்டிலுள்ள ஏனைய சமுர்த்தி வங்கிகளுக்கும் இது விஸ்தரிக்கப்படவுள்ளது.

சமுர்த்தி வங்கியில் இஸ்லாமிய வங்கிமுறைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று வியாழக்கிழமை கிண்ணியா பிரதேச செயலகத்தில் இடம் பெற்றுள்ளது. கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.முபாரக், உதவி பிரதேச செயலாளர் சீ. கிருஷ்ணேந்திரன், திருகோணமலை உதவி சமுர்த்தி ஆணையாளர் எஸ். திரிமான்ன, கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகள் சமுர்த்தி முகாமையாளர்கள் எனப் பலர் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்துள்ளனர்.

இது தொடர்பான. திட்டமுன் மொழிவு ஒன்றை தயாரித்துச் சமர்ப்பிப்பதற்காக கிண்ணியா சமுர்த்தி தலைமை முகாமையாளர் எம்.எஸ்.ஏ. மனாப் தலைமையில் உலமாக்கள், சமுர்த்திமுகாமையாளர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவின் முன்மொழிவுகளைப் பரிசீலனை செய்தபின் இதற்கான அங்கீகாரம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் முன்வைத்த கோரிக்கையை தொடர்ந்தே கடந்த மே மாதம் இந்த முடிவு எடுக்கப்பட்டது அதை தொடர்ந்து நாட்டில் மொத்தமாக 1048 இயங்கி வரும் சமுர்த்தி வங்கிகளில் இஸ்லாமிய வங்கி முறைத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

News: Lankamuslim

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!