August 04, 2011.... AL-IHZAN Local News
பிறை குழுவினர் பாராட்டு!
புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை திங்கட்கிழமை மாலை அவதானிக்குமாறும் பிறை தென்படும் பட்சத்தில் கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு அறியத் தருமாறும் ஏற்கனவே ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதியான செங்கலடி பகுதியிருந்து சுமார் 5க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கொழும்பு பெரிய பள்ளிவாசலைத் தொடர்பு கொண்டு தமது பிரதேசத்தில் பிறை தென்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக முஸ்லிம்கள் மாத்திரமே பிறை தென்பட்டது தொடர்பாக தகவல் தருகின்ற நிலையில் இம் முறை தமிழ் சகோதரர்களும் மிக்க ஆர்வமாக பிறை கண்டமை தொடர்பில் தகவல் அளித்தமை தமக்கு ஆச்சரியமளிப்பதாக பெரிய பள்ளிவாசலில் கூடிய பிறைக் குழுவினர் தெரிவிக்கின்றனர். அவர்களுக்கும் தமது பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.
பிறை குழுவினர் பாராட்டு!
புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை திங்கட்கிழமை மாலை அவதானிக்குமாறும் பிறை தென்படும் பட்சத்தில் கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு அறியத் தருமாறும் ஏற்கனவே ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய கடந்த திங்கட் கிழமை (01.08.2011) மாலை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ரமழான் தலைப்பிறை தென்பட்டதாக
பெரிய பள்ளிவாசலில் கூடிய பிறைக்குழுவுக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றன.இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதியான செங்கலடி பகுதியிருந்து சுமார் 5க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கொழும்பு பெரிய பள்ளிவாசலைத் தொடர்பு கொண்டு தமது பிரதேசத்தில் பிறை தென்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக முஸ்லிம்கள் மாத்திரமே பிறை தென்பட்டது தொடர்பாக தகவல் தருகின்ற நிலையில் இம் முறை தமிழ் சகோதரர்களும் மிக்க ஆர்வமாக பிறை கண்டமை தொடர்பில் தகவல் அளித்தமை தமக்கு ஆச்சரியமளிப்பதாக பெரிய பள்ளிவாசலில் கூடிய பிறைக் குழுவினர் தெரிவிக்கின்றனர். அவர்களுக்கும் தமது பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.
1 கருத்துரைகள் :
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
//இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதியான செங்கலடி பகுதியிருந்து சுமார் 5க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கொழும்பு பெரிய பள்ளிவாசலைத் தொடர்பு கொண்டு தமது பிரதேசத்தில் பிறை தென்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.//
வரவேற்கப்படவேண்டிய விஷயம் சகோ
Post a Comment