animated gif how to

அம்பானியின் கனவு இல்லம் வக்ப் நிலத்தில் – மகாராஷ்டிர அரசு தடுமாற்றம்

August 04, 2011 |

August 04, 2011.... AL-IHZAN India News

ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தன்னுடைய 27 அடுக்கு கொண்ட ஆடம்பர கனவு இல்லம் கட்ட வக்ப் நிலத்தை முறைகேடாக வாங்கியது தொடர்பான பிரச்சனையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மகாராஷ்டிரா அரசு தடுமாற்றத்தில் உள்ளது.
முகேஷ் அம்பானி வக்ப் நிலத்தை ருபாய் 20 கோடி கொடுத்து வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு இப்பிரச்சனை தொடர்பாக மாநில அரசுக்கு வரைந்துள்ள கடிதத்தில் நில விவகாரம் குறித்து விசாரிக்க மத்திய புலனாய்வுக் குழுவை பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டது. ஆனால் மகாராஷ்டிர மாநில அரசு சிபிஐ விசாரணை குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை...
மும்பை போஷ் அல்டாமவுண்ட் ரோட்டில் இருக்கும் வக்ப் இடத்தில் முகேஷ் அம்பானி கனவு இல்லம் கட்டத் தொடங்கியதிலிருந்து இப்பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது குறிப்பிடத்கது.
கடந்த திங்கள் அன்று மாநிலங்கள் அவையில் எதிர்கட்சித் தலைவர் ஏக்நாத் கஹட்சே இது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் ஏக்நாத் கூறுகையில் ரூபாய் 500 கோடி மதிப்புடைய நிலத்தை கரிம்பாய் இப்ராஹிம்பாய் கோஜா டிரஸ்ட் வெறும் 21 கோடிக்கு விற்றுள்ளதாகவும் உண்மையில் இந்த நிலம் முஸ்லிம் சமூக பிள்ளைகள் படிக்க பள்ளிக்கூடம் கட்ட ஒதுக்கப்பட்ட நிலம் எனவும் அவர் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா சிறுபான்மையினர் துறை அமைச்சர் ஆரிப் நசீம் கான் மத்திய அரசிடம் இருந்து நிலம் தொடர்பாக கடிதம் வந்தது எனவும் கடிதம் குறித்து கடந்த ஜூலை 25 தாம் தேதி மாநில உள்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதாகவும் ஆனால் உள்துறையின் நிலை இதுவரை என்னவென்று தமக்குத் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுளார். மேலும் கான் கூறியதாவது மகாராஷ்டிரா அரசு கடந்த 2004 ஆம் ஆண்டு இந்நிலம் தொடர்பான பரிவர்த்தனையில் டிரஸ்ட்டிற்கு ஒரு கடிதம் அனுப்பியதாகவும் மேலும் டிரஸ்ட்டிடம் இருந்து 16 லட்சம் ரூபாய் பெற்றவுடன் அக்கடிதத்தை திரும்ப பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் இவ்விவகாரம் குறித்து மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் R .R .பாட்டீல் கடிதம் குறித்து சட்டத்துறையில் ஆலோசனை பெற்ற பிறகே எந்த கருத்தையும் கூற இயலும் எனத் தெரிவித்தார்.
மேலும் கடந்த 2007 ஆம் ஆண்டு அன்றைய சிறுபான்மையினர் துறை அமைச்சராக இருந்த அனீஸ் அஹ்மத் இந்த நில பரிவர்த்தனையில் பல குளறுபடிகள் நடந்திருப்பதாகவும் எனவே நிலத்தை மகாராஷ்டிரா வக்ப் வாரியமே திரும்ப எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். ஆனால் விலாஸ்ராவ் தேஷ்முக் நில பரிவர்த்தனையில் எந்த குளறுபடிகளும் நடைபெறவில்லை எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!