August 19, 2011.... AL-IHZAN Local News
தென் கொரியாவில் வேலைக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு ‘இலங்கை முஸ்லிம் சங்கம் – தென் கொரியா” என்ற நிறுவனம் பல்வேறு உதவிகளை செய்து வருவதாக அதன் இணைப்பாளர் எம்.ஏ.எம்.மபாஸிம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 75 பேர்களைக் கொண்ட இவ்வமைப்பு பூஸான் எனும் பிரதேசத்திலுள்ளதாகவும், இது இலங்கையிலிருந்து தென் கொரியாவுக்கு தொழிலுக்காக வருபவர்களுக்கு தொழில் வழிகாட்டல் மற்றும் நெறிப்படுத்தலுடன் இலங்கையர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உரிய முறையில் தீர்த்து வருகிறது என்றார்.
மேலும், தென் கொரியாவுக்குச் சென்ற இலங்கையர் ஏதாவது பிரச்சினைகளை எதிர்நோக்கினால் உடனடியாக கீழ் உள்ள நபருடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்புக்கு, எம்.ஏ.எம்.மபாஸிம், தொலைபேசி இலக்கம் - 00821028549926
0 கருத்துரைகள் :
Post a Comment