animated gif how to

இந்திய முஸ்லிம்களின் கவனத்திற்கு..!!

August 19, 2011 |

August 19, 2011.... AL-IHZAN India News

ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் யுத்தத்திற்கு பின்னரான முஸ்லிம் சமூகத்தின் நிலை தொடர்பில் ஆழ்ந்த கவலைகள் வெளிக்கிளம்பியுள்ளன.

இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப் பலவலாக்கம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட நாள்முதல் முஸ்லிம் சமூகத்திடமிருந்தும் தம்மை அந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டு வந்தது. இருந்தபோதும் முஸ்லிம் சமூகத்தின் இந்த நியாயமான கோரிக்கை எவ்வகையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.


இந்திய - இலங்கை அரசியல் விவகாரங்கள் தொடர்பில் அண்மையில் இலங்கை வந்துசென்ற இந்திய உயர்மட்ட தரப்பினர்கூட முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளை சந்தித்து எத்தகைய பேச்சுக்களிலும் ஈடுபட்டிருக்கவில்லை. இதனால் இலங்கை முஸ்லிம்களை இந்தியா மறந்துவிட்டதா அல்லது இலங்கை முஸ்லிம்களின் நியாயமான கேரிக்கைகளை செவிசாய்க்க இந்திய தயாரில்லையா என்ற கேள்விகளும் எழுந்திருந்தன...
இவ்வாறானதொரு நிலையில்தான் தற்போது இலங்கை தமிழ் கட்சிகளை பேச்சுவார்த்தை ஒன்றுக்காக இந்திய அழைப்பு விடுத்துள்ள தகவல்களும் வெளியாகியுள்ளன. இலங்கை முஸ்லிம் அரசியல் சக்திகளின் தகவல்களின்படி அவ்வாறான அழைப்பு எதுவும் முஸ்லிம் தரப்புக்கு விடுக்கப்படவில்லை.

இந்நிலையில்தான் இலங்கை முஸ்லிம்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகள் தொடர்பில் இந்திய முஸ்லிம்கள் அவதானம் செலுத்துவதும், இலங்கை முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பதும் அவசியமாக நோக்கப்படுகிறது.


இந்திய தமிழ்நாட்டு மாநிலத்தில் வாழும் 8 கோடி தமிழர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து இந்திய மத்தியரசு இலங்கை தொடர்பிலும், தமிழர் குறித்தும் தீர்மானங்களை மேற்கொள்ள முடியுமென்றால் இந்தியாவில் வாழும் 15 கோடி முஸ்லிம் உறவுகள் ஏன் இலங்கை முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க முடியாது என எம்முன் வேதனையுடன் கூடிய கேள்விகள் எழுகின்றன. 


இலங்கை தமிழர் பிரச்சினை இவ்வளவு தூரம் வியாப்பகம் பெற்றிருப்பதற்கு காரணங்களில் ஒன்று தமிழ்நாட்டு தமிழ் மக்களின் பரந்துபட்ட ஒத்துழைப்பாகும் என்பது மறுதலிக்க முடியாத மெகா உண்மையாகும்.  


இந்திய அரசாங்கம் இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களாயினும் சரி, அல்லது இந்திய அரசாங்கத்தின் உதவிகளாயினும் சரி அவற்றினால் இலங்கை முஸ்லிம்கள் எத்தகைய பயன்களையும் பெறாமைக்கு ஒருவகையில் இந்திய முஸ்லிம்களும் பதில் சொல்லியாக வேண்டும். 


எனவே இனிமேல் இலங்கை முஸ்லிம்களுக்காகவும், அவர்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகள் தொடர்பாகவும் இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் குரல்கொடுக்க வேண்டிய பாரிய கடப்பாடு இந்திய முஸ்லிம்களுக்கு உண்டு. இந்த கடப்பாட்டிலிருந்து இந்திய முஸ்லிம்கள் விலகிநிற்க முடியாது. தீர்க்கமான இந்த காலகட்டத்தில் இந்திய முஸ்லிம்கள், இந்திய முஸ்லிம் அரசியல் வாதிகள், இந்திய முஸ்லிம் அமைப்புக்கள், இந்திய முஸ்லிம் எழுத்தாளர்கள், இந்திய முஸ்லிம் ஊடக நிறுவனங்கள் இதுகுறித்து உடனடிக்கவனம் செலுத்தவேண்டும்.


இலங்கை முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்ற கோரிக்கை இந்தியாவில் மேலோங்குமாயின் நிச்சயமாக இவ்விடயத்தில் இந்திய மத்தியரசும், இலங்கை அரசும் அதற்கு பதில் கூறவும், இலங்கை முஸ்லிம்கள் குறித்து கவனம் செலுத்தும் நிலையுமேற்படும்.


அதேவேளை இலங்கை முஸ்லிம்களை மறந்தும், அசட்டைசெய்தும் இந்திய அரசாங்கம் இலங்கையில் மேற்கொள்ளும் எத்தகைய நகர்வுகளும் உரிய பலனை பெற்றுத்தராது என்பதையும் இங்கு இந்தியா கவனத்திற்கொள்வது சிறந்தது. ஏனெனில் ஒரு சிறுபான்மை சமூகத்தின் கோரிக்கைகளை மாத்திரம் கவனத்திலெடுத்து, மற்றைய சிறுபான்மை சமூகத்தின் நலன்களை இந்தியா திட்டமிட்டு நசுக்குகிறது என்ற நிலைப்பாடு இலங்கை முஸ்லிம்களிடையே குறிப்பாக வடகிழக்கு முஸ்லிம்களிடையே ஏற்படுமாயின் இந்தியாவின் அத்தனை திட்டங்களும் வெற்றியடைந்துவிடாது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்..!!

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!