animated gif how to

இம்ரான்கான் பாகிஸ்தான் ஜனாதிபதியாக ஆமோக ஆதரவு

August 14, 2011 |

August 14, 2011.... AL-IHZAN World News

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான்கான். 1992-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு உலககோப்பையை பெற்றுக் கொடுத்தார். அதோடு ஓய்வு பெற்றார்.   கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இம்ரான்கான் அரசியலில் குதித்தார். 


1996-ம் ஆண்டு அவர் தெரீக்-இ-இன்ஷாப் என்ற கட்சியை தொடங்கினார். 1997 தேர்தலில் அவரது கட்சி தோல்வியை தழுவியது. அதன் பிறகு அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 
தற்போது பாகிஸ்தானில் தீவிரவாதத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களில் இம்ரான்கான் முன்னணியில் திகழ்கிறார். பேரணி, தர்ணா போராட்டங்களை நடத்தி மக்களை அவர் பெரிதும் கவர்ந்து வருகிறார். தலிபான்களை நேரடியாக தாக்கி பேசுவதால் எப்போதும் இல்லாத அளவுக்கு இம்ரான்கானுக்கு பாகிஸ்தானில் அதிக ஆதரவு இருக்கிறது.
பாகிஸ்தானில் 2013-ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடக்கிறது. அடுத்த பொதுத் தேர்தல் தொடர்பாக தனியாக அமைப்பு ஒன்று கருத்து கணிப்பு நடத்தியது. இதில் இம்ரான்கானுக்கு அதிக ஆதரவு இருந்தது. பாகிஸ்தான் அதிபராக அவருக்கு 77 சதவீதம் ஆதரவு இருப்பதாக கருத்து கணிப்பை நடத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 11 சதவீத ஆதரவே உள்ளது. கிலானிக்கு 13 சதவீத ஆதரவு காணப்படுகிறது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!