August 13, 2011.... AL-IHZAN Local News
எதிர்வரும் 25 ஆம் திகதி நினைவு கூறப்படும் சர்வதேச -குத்ஸ்- தினத்தை முன்னிட்டு ஓவியப் போட்டி ஒன்றை நடத்த ஈரான் இஸ்லாமியக் குடியரசு தூதரக கலாசாரப் பிரிவு முடிவு செய்துள்ளது.
10-16 வயதுக்கு இடைப்பட்ட ஆண்-பெண்-ஆகிய இரு பாலாரும் இதில் பங்கேற்கலாம் என்றும் மஸ்ஜிதுல் அக்ஸா-மஸ்ஜிதுல் அக்ஸாவை நோக்கிய சுதந்திர பயணம்-பலஸ்தீன சிறுவர்கள் ஆகிய தலைப்புக்களில் போட்டிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓவியங்கள் குறைந்தது 30-20 செ.மி கூடியது 35-55 செ.மீ அளவு கொண்டதாக தரமான தாளில் இருக்க வேண்டும் எனவும் ஒயில் பெயின்டிங் தவிர்ந்த ஏனைய எந்த வகை வர்ணங்களையும் பாவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓருவர் ஒரு தலைப்புக்கு மேலும் ஓவியங்களை அனுப்பலாம்.
ஓவியங்களை வரைபவர்களின் வயது மற்றும் அவர்களின் ஆக்கங்கள் என்பன அங்கீகரிக்கப்பட்ட ஒரு அதிகாரியால் அத்தாட்சிப்படுத்தப்பட வேண்டும். (பாடசாலை அதிபர்-கிராம சேவகர் அல்லது சட்டத்தரணி) எல்லா ஓவியங்களும்- கலாசார பிரிவு ஈரான் இஸ்லாமியக் குடியரசு தூதரகம் இல: 06 சேர் ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்தை கொழும்பு -07 என்ற முகவரிக்கு எதிர்வரும் 22.08.11க்கு முன் அனுப்பப்பட வேண்டும்.
தெரிவு செய்யப்படும் சிறந்த பத்து ஓவியங்களுக்கு தலா ஐயாயிரம் ரூபா வீதம் பணப் பரிசு வழங்கப்படும் எனவும் ஈரான் இஸ்லாமியக் குடியரசு கலாசாரப் பிரிவு அறிவித்துள்ளது.

0 கருத்துரைகள் :
Post a Comment