August 04, 2011.... AL-IHZAN World News
உலகிலேயே உயரமான கோபுரம் ஒன்றை பின் லேடன் குழுமம் சவூதி அரேபியாவில் கட்டவுள்ளது. வெவ்வேறான கட்டிட அமைப்புகளுடன் ஜெடாஹ்வில் அமைந்துள்ள செங்கடல் துறைமுக பட்டணத்தில் இக்கோபுரம் அமைக்கப்படவுள்ளது.
உலகிலேயே உயரமான கோபுரம் ஒன்றை பின் லேடன் குழுமம் சவூதி அரேபியாவில் கட்டவுள்ளது. வெவ்வேறான கட்டிட அமைப்புகளுடன் ஜெடாஹ்வில் அமைந்துள்ள செங்கடல் துறைமுக பட்டணத்தில் இக்கோபுரம் அமைக்கப்படவுள்ளது.
சவூதி அரேபிய கோடீஸ்வரரான அல்வாலீட் தலால் இக்கோபுர அமைப்புக்கான AS $1.23 பில்லியன் (RM3.6பில்லியன்) மதிப்புள்ள குத்தகையில் கையெழுத்திட்டார். இக்கோபுரம் இன்னும் ஐந்து(5) ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இளவரசர் அல்வாலிட்-க்குச் சொந்தமான ஜெடாஹ் நகருக்கு வெளியே அமைக்கப்படவுள்ள இக்கோபுரம் Kingdom City மேம்பாட்டுத் திட்டத்திற்கு உயிர்நாடியாகத் திகழும் என்றும் கூறப்படுகிறது...
ஜெடாஹ்வில் அமைக்கப்படவுள்ள இக்கோபுரம் புறக்கணிக்கமுடியாத நிதி மற்றும் பொருளாதார தகவல்களை அனுப்பும்” என இளவரசர் அல்வாலிட் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இக்கோபுரத்திற்கு ஒரு ஆழமான அரசியல் கருத்து உள்ளது. சவூதி மக்கள் உள்நாட்டு முதலீடுகளை மேற்கொள்கின்றனர்; எங்களை சுற்றி நடக்கும் பல்வேறு சம்பவங்கள், மாற்றங்கள் மற்றும் சண்டைசச்சரவுகளுகிடையே நாங்கள் இதனை மேற்கொள்வதை உலகிற்குப் பறை சாற்றும் என்றும் இளவரசர் அல்வாலிட் கூறினார்.
0 கருத்துரைகள் :
Post a Comment