August 04, 2011.... AL-IHZAN World News
கெய்ரோ:பல தசாப்தங்கள் நீடித்த கொடுங்கோல் ஆட்சிக்கு தலைமை வகித்த ஹுஸ்னி முபாரக்கை நீதிமன்றத்தில் ஆஜராக்க இயலும் என எகிப்திய மக்கள் நேற்றுவரை கருதவில்லை.
..
தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முபாரக் மீதான விசாரணையை லட்சக்கணக்கான மக்கள் பார்த்தனர். “நாட்டின் நீதித்துறையின் மீது நான் அபிமானம் கொள்கிறேன். எனது மகனின் ஆன்மாவுக்கு இனி ஓய்வு கிடைக்கும்” – மக்கள் எழுச்சிப்போராட்டத்தில் கொலைச் செய்யப்பட்ட 22 வயதான இளைஞரின் தாயாரான ஸஈதா ஹஸன் அப்துல் ரவூஃப் போலீஸ் அகாடமிக்கு வெளியே பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கையில் தெரிவித்தார்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் முபாரக் மீதான விசாரணையை தொலைக்காட்சியில் வீதிகளிலும், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களிலும் நின்றவாறு பார்த்தனர். தனக்கு ஆதரவாக சட்டத்தை உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்தி வந்த முபாரக் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவார் என்பதை எகிப்திய மக்கள் ஒருபோதும் கருதவில்லை என முபாரக்கை பதவியிலிருந்து வெளியேற்றிய 18 நாள் மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்களில் ஒருவரான திரைப்பட தயாரிப்பாளர் அஹ்மத் ரஷீத் பி.பி.சியிடம் தெரிவித்தார்.
நீதிமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய முபாரக்கின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. முபாரக்கை இந்நிலையில் காண்பது எகிப்திய மக்களின் கனவாகும் என அலெக்ஸாண்ட்ரியாவில் போராட்ட வேளையில் துப்பாக்கி குண்டிற்கு பலியான 19 வயது இளம்பெண்ணின் தாயார் காதா அலி கூறினார்.
போலீஸார் ஒரு தோட்டாவின் மூலம் எனது மகளின் இதயத்தை சிதறடித்தது போல முபாரக்கும் அனுபவிக்கவேண்டும் என காதா அலி கூறும்போது அவருடைய கண்களில் கண்ணீர் நிரம்பியிருந்தது.
0 கருத்துரைகள் :
Post a Comment