animated gif how to

லிபியா சரிந்தது,கடாபியின் மகன்கள் கைது, கடாபி எங்கே..??

August 23, 2011 |

August 23, 2011.... AL-IHZAN World News
லிபியாவின் அநேக பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள நிலையில் கடாபியின் 42 வருடகால ஆட்சியும் இன்னும் சில மணித்தியாலங்களில் முடிவுக்கு வந்துவிடுமென நம்பப்படுகிறது.


கடாபியின் இரு மகன்களையும் கிளர்ச்சியாளர்கள் கைதுசெய்துள்ள நிலையில் கடாபி எங்கே என தற்போது பரபரப்பான கேள்வி எழுந்தள்ளது. சிலர் அவர் அயல் நாட்டுக்கு தப்பிச் சென்றிருக்கலாமென எதிர்வு கூறியுள்ள நிலையில் மற்றும் சிலர் அவர் தொடர்ந்தும் லிபியாவில் பதுங்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர்...
அதேவேளை கடாபியின் ஆதிக்கம் எஞ்சியுள்ள பாப் அல் அஸிஸியா  நகரை தவிர அனைத்து பகுதிகளையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக போராளிகள தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


லிபிய தலைநகர் திரிபோலியின் மத்திய பகுதியை கைப்பற்றியதை தொடர்ந்து வீதிகளில் பெருந்திரளான மக்கள் மகிழ்ச்சி ஆரவரங்களில் ஈடுபட்டு வருவதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. முஅம்மர் கடாபியின் ஆதரவு படையினருக்கு எதிராக கடந்த ஆறு மாதங்களாக இடம்பெற்ற மோதல்களின் பின்னர் லிபியபோராளிகள் தலைநகருக்குள் புகுந்துள்ளனர்


இதேவேளை முஅம்மர் கடாபியின் மகன் சைய்ப் அல் இஸ்லாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. கடாபியின் மூத்த மகனான முகமட் அல் கடாபியும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக லிபிய போராளிகள் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை கடாபி விடுத்துள்ள செய்தியில் கிளர்ச்சியாளர்கள் மேற்கு நாடுகளின் அடிமைகள் என்றும் பிரான்ஸ் மற்றும் மேற்கு நாடுகளுக்கு கிளர்ச்சியாளர்கள் சேவகம் செய்பவர்கள் என்றும் தொடர்ந்தும் அவர்களுக்கு  சேவகம் செய்பவர்களாகத்தான் நீங்கள் இருக்க போகின்றீர்கள் என்றும் தெரிவித்துள்ளார். நான் இறுதி வரை தான் இருப்பேன் என் கூறியுள்ள கடாபி, கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பேராடுவதற்கு பழங்குடியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!