August 20, 2011.... AL-IHZAN World News
காஸ்ஸாவில் இஸ்ரேல் ராணுவ விமானங்கள் தொடர்ச்சியாக இரண்டாவது தினமும் தாக்குதலை தொடர்ந்தன. காஸ்ஸா நகரத்தின் கிழக்கு பிரதேசமான பெய்த்தூனில் இஸ்ரேல் குண்டுவீச்சு தாக்குதலை நடத்தியது.
இஸ்ரேலின் அக்கிரம தாக்குதலில் 11ஃபலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. எகிப்தையொட்டிய ரஃபா எல்லையில் இஸ்ரேலின் தாக்குதலில் 3 எகிப்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக எகிப்திய செய்தி நிறுவனம் கூறுகிறது.
கடந்த வியாழக்கிழமை இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் பயணித்த வாகனத்தின் மீது ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டி இஸ்ரேல் இந்த அக்கிரமத்தாக்குதலை நடத்தியுள்ளது. ஹமாஸின் பதிலடியில் ஏழு இஸ்ரேலிய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.ஆனால், இஸ்ரேலிய ராணுவத்தினர் மீதான தாக்குதலை ஹமாஸ் தலைமை மறுத்துள்ளது...
இதற்கிடையே, மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு தொழுகைக்காக சென்ற இளைஞர்கள் மீது இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் ஏராளமான ஃபலஸ்தீன் இளைஞர்கள் காயமடைந்தனர். ஜும்ஆ தொழுகைக்காக அல் அக்ஸா மஸ்ஜிதிற்கு செல்லும் வேளையில்தான் இஸ்ரேலிய ராணுவம் இந்த அடாவடி தாக்குதலை நடத்தியுள்ளது. ரமலான் மாதம் துவங்கியபிறகு புனித ஸ்தலமான மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு தொழுகை நடத்தச்செல்வதற்கு ஃபலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.45க்கும் 50க்கும் இடையேயான வயதையுடையவர்கள் மட்டுமே மஸ்ஜிதுல் அக்ஸாவிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதற்கிடையே எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் அமைந்துள்ள இஸ்ரேலிய தூதரகத்தை எகிப்திய மக்கள் சுற்றிவளைத்தனர்.இஸ்ரேலின் தாக்குதலில் 3 எகிப்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து தூதரகத்தை அவர்கள் சுற்றிவளைத்தனர்.
0 கருத்துரைகள் :
Post a Comment