August 17, 2011.... AL-IHZAN World News
ஐ.நா. உணவுகளும் கொள்ளை!
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சோமாலியாவில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் சாப்பிட உணவு இன்றி அங்கு வாழ்பவர்களில் பாதி பேர் அவதிப்படுகின்றனர். 5 வயதுக்குட்பட்ட சுமார் 29 ஆயிரம் குழந்தைகள் உணவின்றி உயிரிழந்துள்ளனர். பல குழந்தைகள் எலும்பு கூடுகளாக நடமாடி வருகின்றனர்.
எனவே சோமாலியா அரசு நிவாரண முகாம்களை அமைத்துள்ளது.அந்த முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு ஐ.நா. சபையின் உலக உணவு திட்ட குழுமம் மூலம் உலக நாடுகள் உணவு பொருட்களை அனுப்பி வைக்கின்றன. ஆனால் அவற்றை ஒரு கும்பல் கொள்ளையடித்து வருகிறது. அந்த பொருட்களை மிக அதிக விலைக்கு விற்று பணம் சம்பாதித்து வருகின்றது...
இதனால் முகாம்களில் தங்கியிருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவு பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து ஐ.நா. சபையின் உலக உணவு திட்ட குழுமத்திடம் புகார் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 2 மாதங்களாக இந்த உணவு கொள்ளை நடப்பது உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து உணவு பொருட்கள் கொள்ளை குறித்த விரிவான விசாரணைக்கு ஐ.நா. சபை உத்தரவிட்டுள்ளது.

0 கருத்துரைகள் :
Post a Comment