animated gif how to

கிண்ணியாவில் இஸ்லாமிய ஜிஹாத்:இனவாத சிங்கள திவயின பத்திரிகை கூறுகிறது

August 17, 2011 |

August 17, 2011.... AL-IHZAN Local News

கிண்ணியா கடற்படை முகாம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தின் பின்னணியில் இஸ்லாமிய அடிப்படைவாத ஜிஹாத் அமைப்பொன்று இருப்பதாக புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளனர் என சிங்கள திவயின  பத்திரிகை தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் செயற்பாட்டாளர்கள் 30 நிமிடத்திற்குள் ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை வரவழைத்து கடற்படை முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்பின் கிளைகள் காத்தான்குடி, திருக்கோயில், கல்முனை, பொத்துவில், அக்கரைப்பற்று ஆகிய நகரங்களில் செயற்படுவதாகவும் திவயின தெரிவித்துள்ளது.
කින්නියා ප්‍රහාරය පිටුපස මූලධර්මවාදී සංවිධානයක්‌
කීර්ති වර්ණකුලසූරිය
ත්‍රිකුණාමල කින්නියා නාවික හමුදා කඳවුරට ප්‍රහාර එල්ල කිරීම පසුපස මූලධර්මවාදී සංවිධානයක්‌ සිටින බව බුද්ධි අංශ විසින් සොයාගෙන ඇත. මේ සංවිධානයේ ක්‍රියාකාරීන් විසින් විනාඩි 30 ක්‌ වැනි කාලසීමාවකදී දහසකට අධික පිරිසක්‌ කැඳවා නාවික කඳවුරට ප්‍රහාර එල්ල කර තිබේ. මේ අන්තවාදී සංවිධානයේ ශාඛා කාතන්කුඩි, තිරුක්‌කෝවිල්, කල්මුණේ, පොතුවිල් සහ අක්‌කරපත්තුව යන නගරවල ඇතැයි තවදුරටත් හෙළිවී ඇත.


எமது குறிப்பு - சிங்கள இனவாதப் பத்திரிகையான திவயின இதற்கு முன்னரும் இவ்வாறு முஸ்லிம்கள் குறித்த பல தவறான தகவல்களை வெளியிட்டுள்ளது. இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களில் இயங்குகிறது என்ற செய்திகளை வெளியிட்டு சிங்கள மக்களிடையே முஸ்லிம்கள் குறித்த தவறான அபிப்பிராயத்தையும், மேலும் மேலும் கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களில் இராணுவ படை முகாம்களை அமைத்து சிங்கள ஆதிக்கத்தை நிலைநாட்டுவதுமே இவ்வாறான செய்திகளின் நோக்கமாகும். எனவே முஸ்லிம்களும், அவை சார்பு அமைப்புக்களும் இவ்விடயத்தில் நிதானமாக செயற்படுவதும் சிங்கள இனவாத பத்திரிகையான திவயினக்கு எதிராக உரிய விதத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதுமே சிறந்த தெரிவாக இருக்கமுடியும்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!