animated gif how to

இஹ்வானுல் முஸ்லிமூனுடன் இணைகிறது ஜமாஅத்தே இஸ்லாமி

August 05, 2011 |

August 05, 2011.... AL-IHZAN World News

பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கமும் எகிப்து இஹ்வானுல் முஸ்லிம் இயக்கமும் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளது.


இவ்விரு அமைப்புக்களினதும் முக்கிய தலைவர்கள் அண்மையில் கெய்ரோவில் அமைந்துள்ள இஹ்வானுல் முஸ்லிமீன் தலைமையகத்தில் சந்தித்துக் கொணடனர். இதில் பாகிஸ்தான் ஜமாத்தே இஸ்லாமி சார்பில் அதன் தலைவர் ஸெய்யத் முனவ்வர் ஹஸன் உள்ளிட்ட குழுவினரும், இஹ்வானுல் முஸ்லிமின் சார்பில் அதன் தலைவர் டாக்டர் முஹம்மட் பதாயீ தலைமையழலான குழுவினரும் பங்கேற்றுள்ளனர்....
காஷ்மீர். பலஸ்தீன் உட்பட உலகம் முழுவதும் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்கவும், உலகளாவிய முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடனே இவ்விரு இயக்கங்களும் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் இஸ்லாத்தின் கண்ணியத்தை மேம்படுத்துவதற்கும், அதன் தூய தூதை உலகெங்கும் பரவச் செய்வதற்கும் உலகெங்கிலுமுள்ள இஸ்லாமிய அமைப்புக்களுடனும் தொடர்புகளை மிகவேகமாக ஒன்றிணைக்கச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதன் அவசியம் குறித்தும் இந்த இருதரப்பு சந்திப்புகளின் போது ஆராயப்பட்டுள்ளது.


0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!