August 09, 2011.... AL-IHZAN Local News
பலஸ்தீனம் தனிநாடாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பலஸ்தீனம் ஐக்கிய நாடுகள் அமைப்பில் உறுப்புரிமை பெற்றுக் கொள்வதற்கு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமைப் பேரவையில் தனி நாடாக அங்கீகரிக்குமாறு பலஸ்தீனம், ஐக்கிய நாடுகள் அமைப்பில் கோரிக்கை விடுக்கவுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பலஸ்தீன தூதுவர் அன்வர் அல் அஃஹாவுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜெருசலத்தை தலைநகராகக் கொண்டு பலஸ்தீன இராச்சியம் உருவாக்கப்படுவதற்கு பூரண ஆதரவளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.இஸ்ரேலுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் பலஸ்தீன் தூதுவர் , அமைச்சர் பீரிஸிற்கு விளக்கமளித்துள்ளார்.

0 கருத்துரைகள் :
Post a Comment