August 08, 2011.... AL-IHZAN Local News
அடுத்த வருடத்திலிருந்து பல்கலைக்கழகங்களில் வெளிவாரிப் பாடநெறிகளின் தரம் தொடர்பாக அதிகளவுக்கு கவனம் செலுத்தப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக சகல பல்கலைக்கழகங்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிபந்தனைகளுக்கு அமைவாகவே எதிர்காலத்தில் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் வெளிவாரிப் பாடநெறிகள் இடம்பெறுமென அவர் மேலும் கூறியுள்ளார்...
பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படும் வெளிவாரிப் பட்டங்களின் தரத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டே புதிய முறைமை அறிமுகப்படுத்தப்படுவதாக அவர் கூறுகிறார். இதன் மூலம் பல்கலைக்கழக உள்வாரி மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் பட்டங்களின் தகைமைக்கு சமனான விதத்தில் வெளிவாரி பட்டங்களும் அமையும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

0 கருத்துரைகள் :
Post a Comment