animated gif how to

இலங்கை வான்பரப்பை வட்டமிட்ட 10 அமெரிக்க போர் விமானங்கள்!

August 07, 2011 |

August 07, 2011.... AL-IHZAN Local News

அமெரிக்க விமானங்கள் 10 இலங்கை வான் பரப்பைக் கடந்து சென்றதாக பேதுருதாலகாலவில் உள்ள விமானப் பறப்புக் கட்டுப்பாட்டுத் தலைமையகம் உறுதிப்படுத்தியது. இதேவேளை இலங்கை விமானப் படையினரும் இதனை உறுதி செய்துள்ளனர்.
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான 10 போர் விமானங்கள் கடந்த வாரம் இலங்கை வான் பரப்புக்குள் அத்துமீறிப் பறந்துள்ளன. இது குறித்து இலங்கை தனது கண்டனத்தையும் கடும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது.
இது நாட்டின் இறைமையை மீறும் செயல் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம், இலங்கையின் உயர்ந்த மலைப்பகுதியான பீதுருதாலகலவில் உள்ள ரடார் கருவியினால் அவதானிக்கப்பட்டுள்ளது. எனினும் எப்பொழுது இந்த சம்பவம் இடம்பெற்றது என்பது தெரியவரவில்லை.
இதனையடுத்து இலங்கை அரசாங்கம், அமெரிக்காவிடம் தமது உத்தியோகபூர்வ ஆட்சேபனையை தெரிவிக்கவுள்ளது...
சர்வதேச வான்பரப்பு சட்டத்தின்படி ஒரு நாட்டின் வான்பரப்பில் பிரவேசிக்கும் முன்னர், அந்த நாட்டின் அனுமதி பெறப்படவேண்டும். எனினும் அதனை குறித்த அமெரிக்க ஜெட் விமானங்கள் மேற்கொள்ளவில்லை.
இந்த விமானங்கள் அமெரிக்காவின் ஏழாவது படைப்பிரிவின் விமானங்கள் என நம்பப்படுகின்றன.
குறித்த ஊடுருவல் இடம்பெற்ற போது தமது அதிகாரிகள் விமானங்களை இலங்கையின் வான்பரப்பில் இருந்து அகன்று செல்லுமாறு உத்தரவிட்டதாகவும் இலங்கை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த ஊடுருவல், இலங்கையின் வான்பரப்பின் 200 மைல்கள் மற்றும் 380 வான்பரப்பு கிலோமீற்றர் தொலைவில் இடம்பெற்றுளளது. எனினும் இந்த சம்பவம் குறித்து இலங்கையில் உள்ள அமெரிக்க அதிகாரிகள் கருத்து எதனையும் வெளியிடவில்லை.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!