animated gif how to

ரிசானா நபீக் விடுவிக்கப்படும் வாய்ப்புகள்!

August 08, 2011 |

August 08, 2011.... AL-IHZAN Local News
குழந்தையின் பெற்றோர் பொதுமன்னிப்பு வழங்கியதாக தகவல்?
நான்கு மாதக் குழந்தை ஒன்றின் மரணம் தொடர்பில் சவூதியில் மரணதண்டனை கைதியாக இருக்கும் திருகோணமலை மூதூர் பெண்ணான ரிசானா நபீக்இ பொதுமன்னிப்பு கிடைக்கப்பெற்று விரைவில் நாடு திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இலங்கையின் அமைச்சு மட்டக்குழு ஒன்று இதற்கான உத்தியோகபூர்வ விடயங்களுக்காக சவூதிக்கு சென்றிருப்பதாக இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது


2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ம் திகதி முதல் ரிசானர் நபீக்இ சவூதியில் மரணதண்டனை கைதியாக இருந்து வருகிறார்...
சவூதியில் உள்ள சட்டத்தின்படி மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு அந்த நாட்டின் மன்னர் பொதுமன்னிப்பு வழங்கமுடியாது.

அவ்வாறான ஒரு அதிகாரம் இறந்துப்போன குழந்தையின் பெற்றோருக்கே உள்ளது. அத்துடன் இரத்த நிதியும் அவர்களுக்கு செலுத்தப்படவேண்டும்.


இந்தநிலையில் ரிசானா நபீக் புட்டிப்பால் பருக்கிக்கொண்டிருந்த வேளையில் இறந்து போனதாக கூறப்படும் நான்கு மாதக் குழந்தையின் பெற்றோர் ரிசானாவுக்கு பொதுமன்னிப்பை வழங்க இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து குறித்த உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் துறை அமைச்சர் டிலான் பெரேராஇ மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பணியகத் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க ஆகியோர் கடந்த சனிக்கிழமையன்று சவூதிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.


1988 ஆம் ஆண்டு பிறந்த ரிசானாஇ வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான வயது தகுதியை பெற்றிருக்காத போதும்இ முகவரால் 1982 ஆம் ஆண்டு பிறந்தவராக காட்டப்பட்டு 2005 ஆம் ஆண்டு சவூதிக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!