animated gif how to

கொழும்பு மாநகர வேட்பாளராக 3 முஸ்லிம்கள் போட்டி - ஐ.தே.க. நாளை தீர்மானிக்கும்

August 19, 2011 |

August 19, 2011.... AL-IHZAN Local News

கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக எவரை நியமிப்பதென நாளை சனிக்கிழமை ஐ.தே.க.தீர்மானிக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். ஐ.தே.க.வின் நியமன சபை நாளை சனிக்கிழமை மேயர் வேட்பாளர்களாக யாரை நியமிப்பதென முடிவெடுக்கவுள்ளது.


முன்னாள் எம்.பி. முகமட் மஹ்ரூப், மேல் மாகாண சபை உறுப்பினர் கே.வை.பி.ராம், எம்.ஜே.எம்.முஸாமில் ஆகியோரின் பெயர்கள் ஐ.தே.க.வின் கொழும்பு மாநகர மேயர் வேட்பாளராக நியமிக்கப்படக்கூடிய பெயர்ப் பட்டியலில் காணப்படுகின்றன. அதேசமயம் ஐ.தே.க.வின் மறுசீரமைப்பாளர்கள் ஐ.தே.க.வின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் பெயரை பிரசுரித்துள்ளனர். ஆனால் தேர்தலில் போட்டியிடும் விருப்பத்தை இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் வெளிப்படுத்தியிருக்கவில்லை என்று அத்தநாயக்க கூறினார்...

இது இவ்வாறிருக்க கண்டி மாநகர சபையின் மேயர் வேட்பாளராக மறைந்த ஐ.தே.க. சிரேஷ்ட தலைவர் காமினி திசாநாயக்கவின் இளைய மகனான ஜயந்த திசாநாயக்க அல்லது கண்டி முன்னாள் மேயர் ஹரேந்திர துணுவில ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.


வேட்பாளர்களை நியமிக்கும் நியமன சபைக்கு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்குகிறார். இணைப்பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க, ஜோன் அமரதுங்க ஆகியோர் நியமன சபையின் ஏனைய உறுப்பினர்களாவர்.


0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!