July 27, 2011.... AL-IHZAN World News
இரேலுடன் தொடர்பு வைத்திருந்த இரு பலஸ்தீனியர்களுக்கு காசாவில் ஆட்சி புரியும் ஹமாஸ் அமைப்பு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.
இதனை ஹமாஸின் உள் விவகார அமைச்சு அறிவித்தது. எனினும் இந்த மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பான விரிவான தகவல்கள் எதுவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட வில்லை. பலஸ்தீன சட்டத்தின்படி இஸ்ரேலுடன் இணைந்து செயற்படுவது, கொலை மற்றும் போதை கடத்தல் விவகாரம் என்பன மரண தண்டனைக்குரிய குற்றச்சாட்டுகளாகும்.
எனினும் பலஸ்தீன ஜனாதிபதியின் ஒப்புதலின் பேரிலேயே மேற்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை ஹமாஸ் அமைப்பு அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹமாஸ் அமைப்பின் முக்கிய பிரமுகர்களை தாக்குவதற்கு இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீன ஒற்றர்களை பயன்படுத்தி வருகின்றனர்.

0 கருத்துரைகள் :
Post a Comment