July 27, 2011.... AL-IHZAN Local News
மோசடிகளற்ற தேர்தல் ஒன்றிற்காக நாட்டின் தேர்தல் முறைமையை உடனடியாக மாற்ற வேண்டுமென சட்ட வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.
தற்போது நாட்டில் காணப்படும் தேர்தல் முறைமைக்குப் பதிலாக ஜேர்மன் போன்ற நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் தேர்தல் முறைமையை அமைத்தால், தற்போதைய நிலைமைக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முடியுமென சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சிப்லி அசீஸ் கூறினார்.
எவ்வாறாயினும் எமது நாட்டிற்கு பொருந்தக்கூடிய வகையில் அந்த முறையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்....
தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமை காரணமாக அரசியற் கட்சிகளுக்கு இடையிலும், ஒரே கட்சிக்குள்ளும் மோதல்கள் ஏற்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவிரையாளர், காலநிதி பிரதிஹா மஹானாமஹேவா தெரிவிக்கின்றார். இதன் காரணமாகவே பல வன்முறைகளும், மோசடிச் சம்பவங்களும் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியல்வாதிகளின் சில நடவடிக்கைகள் காரணமாக தற்போது காணப்படும் தேர்தல் முறையில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் செயலாளர், சிரேஷ்ட சட்டத்தரணி யு.ஆர்.சில்வா குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதிலும் சில அரசியல்வாதிகள் தமது தேவைகருதி இவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
0 கருத்துரைகள் :
Post a Comment