animated gif how to

மால்கம் எக்ஸ் கொலை:வாழ்க்கை வரலாறு புதிய விசாரணை வழி வகுக்கிறது

July 27, 2011 |

July 27, 2011.... AL-IHZAN World News

நியூயார்க்:அமெரிக்காவின் குடியுரிமை ஆர்வலராக பணியாற்றிய மால்கம் எக்ஸின் புதிய வாழ்க்கை வரலாறு அவருடைய மரணத்தைக் குறித்த மர்மங்களை வெளிப்படுத்துமா? – மால்கம் எக்ஸின் லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் அவ்வாறு கருதுகின்றனர்.
1965-ஆம் ஆண்டு மன்ஹாட்டனில் ஒரு அரங்கில் உரையாற்றும் வேளையில் மால்கம் எக்ஸ் துப்பாக்கி குண்டுக்கு பலியானார். கறுப்பு இன முஸ்லிம்களின் தலைவரான எலிஜா முஹம்மதுடன் மால்கம் எக்ஸிற்கு ஏற்பட்ட கருத்துவேறுபாடு மூலம் அவரது ஆதரவாளர்கள் மால்கம் எக்ஸை கொலைச் செய்ததாக போலீஸ் கூறுகிறது. கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் தண்டனையை அனுபவித்துவிட்டனர். மர்மங்கள் நிறைந்த மால்கம் எக்ஸின் கொலைவழக்கின் மறுவிசாரணைக்கான முயற்சிகள் தோல்வியடைந்தன...

டாக்டர்.மானிங் மாரப்ல் எழுதிய மால்கம் எக்ஸின் புதிய வாழ்க்கை வரலாறு அத்தகைய முயற்சிகளுக்கு வலு சேர்க்கிறது. ’மால்கம் எக்ஸ் எ லைஃப் ஆஃப் த ரி இன்வென்ஷன்’ என்ற பெயரைக் கொண்ட வாழ்க்கை வரலாற்று நூலில் மால்கம் எக்ஸ் மீது துப்பாக்கியால் சுட்டவர் நியூயார்க் நகரத்தில் பெயரை மாற்றிக்கொண்டு வாழ்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  ஹோவாட் பல்கலைக்கழகத்தில் மாணவரான அப்துற்றஹ்மான் முஹம்மது என்பவர் இதனை தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கை மறு விசாரணக்கு உட்படுத்தும் சூழல் தற்பொழுது அமெரிக்காவில் நிலவுகிறது. தெற்கு மாகாணங்களில் இனவெறியர்களான போலீசார் விசாரணை நடத்திய பல வழக்குகளிலும் பல ஆண்டுகளுக்கு பின்னர் மறுவிசாரணை நடந்துள்ளது. திறமையான வழக்கறிஞர் கான்ஸாஸில் ஆல்வின் ஸைக்ஸ் அமெரிக்க நீதித்துறை மால்கம் எக்ஸின் கொலையைக் குறித்த உண்மையான விபரங்களை வெளிக்கொணர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மால்கம் எக்ஸின் ஏழு பெண் மக்களில் ஒருவரான இல்யஸாவும் மறுவிசாரணை தேவை என கூறுகிறார். வெள்ளையர்களுடனான வெறுப்பை அடிப்படையாக வைத்து எலிஜா முஹம்மது நிறுவிய ‘நேசன் ஆஃப் இஸ்லாம்’ என்ற இயக்கத்திலிருந்து கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்த மால்கம் எக்ஸ் பின்னர் ஹஜ் கடமையை நிறைவேற்றி இஸ்லாத்தின் உலகளாவிய சகோதரத்துவத்தை புரிந்துக்கொண்டார். மாலிக் அல் ஷபாஸ் என பெயரை மாற்றிய மால்கம் எக்ஸை எலிஜா முஹம்மது எதிரியாக பிரகடனப்படுத்தியது அவரது மரணத்திற்கு தூண்டுகோலாக அமைந்தது என கூறப்படுகிறது.
போலீஸார் கைதுச் செய்த தாமஸ் ஹாகன் உள்ளிட்ட இரண்டுபேரை நீதிமன்றம் தண்டித்தாலும் சதித்திட்டத்தை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெறவில்லை. கடுமையான தாக்குதலை நடத்தியது வில்லியம் ப்ராட்லி என்பவராவார் என கூறப்படுகிறது. போலீஸ் பதிவுச்செய்த வழக்கில் ப்ராட்லி குற்றவாளியாக்கப்படவில்லை. எஃப்.பி.ஐயும் நீதித்துறையும் ஒத்துழைத்து செயல்பட்டால் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கலாம்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!