July 16, 2011.... AL-IHZAN Local News
எஜமானரை மாட்டி விடுகின்றமைக்காக உருக்குக் கம்பிகளை கால்களில் ஏற்றி இருக்கின்றார் குவைத்தில் சாரதியாக கடமை ஆற்றுகின்ற இலங்கையரான ஆண் ஒருவர். ஆயினும் குவைத்துக்கான இலங்கைத் தூதரகம் உண்மையை கண்டுபிடித்து விட்டது.
முறைப்பாடு செய்கின்றமைக்காக இவர் தூதரகத்துக்கு சென்று இருந்தார். கால்களில் 14 கம்பிகள் ஏற்றப்பட்டு இருந்தமையை காண்பித்து இருக்கின்றார். இருப்பினும் கம்பிகள் ஏற்றப்பட்ட சந்தர்ப்பத்தை இவரால் சரியாக சொல்ல முடியவில்லை.
தூதரகத்தின் ஏற்பாட்டில் சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் இவர் மீது பரிசோதனைகள் மேற்கொண்டார். இலங்கையர் சுயமாகவே கம்பிகளை ஏற்றி இருக்கின்றார் என்று இப்பரிசோதனைகளின் முடிவில் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபணம் ஆனது.
0 கருத்துரைகள் :
Post a Comment