July 24, 2011.... AL-IHZAN Local News
பெரும் பரபரப்புக்கு மத்தியில் நேற்று இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடபகுதியில் வல்வெட்டித்துறை நகர சபை, வலிகாமம் தென் மேற்கு, வலிகாமம் வடக்கு மற்றும் துணுக்காய் பிரதேச சபைகளில் தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. நெடுந்தீவு பிரதேச சபை ஐக்கிய சுதந்திர முன்னணி வசம் வந்துள்ளது. இருப்பினும் வடக்கில் பெரும்பாலான சபைகளில் தமிழரசுக் கட்சியே முன்னணியில் உள்ளதாக இன்று அதிகாலை 2 மணிவரை கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.
ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கான வாக்குப் பெட்டிகளில் உரிய அதிகாரிகள் ஒப்பம் இடாமையாலும் தேர்தல் திணைக்களத்தின் பாதுகாப்பு ஸ்ரிக்கர் ஒட்டப் படாததினாலும் வாக்குகளை எண்ணுவது குறித்து தேர்தல் திணைக்களத்தின் அறிவுறுத்தலை அதிகாரிகள் எதிர்பார்த்திருப்பதாக அறிய முடிகிறது. சாவகச்சேரி நகர சபை, பருத்தித்துறை நகர சபை என்பவற்றில் தமிழரசுக் கட்சி நேற்று நள்ளிரவுவரை கிடைத்த தகவல்களின்படி முன்னணியில் இருப்பதாக அறிய முடிந்தது. நெடுந்தீவு பிரதேச சபையை ஐக்கிய சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது...
இதில் தமிழரசுக் கட்சிக்கு ஓர் இடம் கிடைத்துள்ளது. இந்த முடிவு அறிவிக்கப்பட்டபோது தமிழரசுக் கட்சியினர் கைதட்டி தமது மகிழ்வை வெளிப்படுத்தினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. வேலணைப் பிரதேச சபைக்கான வாக்கெண்ணும் பணிகளில் தொடர்ந்தும் தாமதம் நிலவுவதாக அங்கிருந்த கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
பருத்தித்துறை பிரதேச சபையில் தமிழரசுக் கட்சி முன்னணியில் உள்ளது
இதேவேளை வன்னி மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியே முன்னணியில் உள்ளது. துணுக்காய்ப் பிரதேச சபையை அது கைப்பற்றியுள்ளது. இதேபோன்று அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில், காரைதீவு ஆகிய பிரதேச சபைகளுக்கான வாக்கெடுப்பில் தமிழரசுக் கட்சி வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் திரக்கோவில், காரைதீவு பிரதேச சபைகளை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. இதேவேளை தென்பகுதியில் களுத்துறை, காலி, மாத்தறை, கம்பஹா மற்றும் திருமலையிலும் கந்தளாயிலும் மலையகத்தில் கண்டி, தலவாக்கலை லிந்துலயிலும் நேற்று அதிகாலை 2.00 மணிவரை கிடைத்த முடிவுகளின்படி ஐக்கிய சுதந்திர முன்னணி பெரு வெற்றி பெற்றுள்ளது.
News: virakesari Online

0 கருத்துரைகள் :
Post a Comment