July 24, 2011.... AL-IHZAN World News
ஓஸ்லோ: நோர்வேயயில் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 91ஆக உயர்ந்துள்ளது. உட்டோயா தீவில் போலீஸ் வேடத்தில் வந்த நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 84 பேரும் தலைநகரான ஓஸ்லோவில் பிரதமரின் அலுவலகத்திலும், அரசு அலுவலகங்களின் அருகிலும் நடந்த குண்டுவெடிப்பில் எட்டுபேரும் மரணித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வலதுசாரி கிறிஸ்தவ தீவிரவாதியான ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரவிக் என்ற 32 வயது பயங்கரவாதி உட்டோயாவில் கைதுச் செய்யப்பட்டுள்ளான். குண்டுவெடிப்பின் பின்னணியில் இவன்தான் செயல்பட்டுள்ளான் என போலீஸ் கருதுகிறது. தீவிரவாதியை போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்...
உட்டோயா தீவில் ஆளுங்கட்சியின் இளைஞர் பிரிவினர் நடத்திய முகாமில் அத்துமீறி நுழைந்த இந்த தீவிரவாதி துப்பாக்கியால் சரமாரியாக சுட ஆரம்பித்தான். 84 பேர் இந்த துப்பாக்கிச்சூட்டில் மரணித்துள்ளனர் என உறுதிச் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மரண எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது. தீவிரவாதியை கைதுச் செய்தபிறகு நடந்த தேடுதலில் 80 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
ஆன்லைனில் முஸ்லிம்களுக்கு எதிரான செய்திகளை பிரசுரிப்பவன் தான் கைதுச் செய்யப்பட்ட தீவிரவாதி என போலீஸ் கமிஷனர் ஸ்பீனங் ஸ்பான்ஹிம் அறிவித்துள்ளார். வலதுசாரி தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ள இவன் சொந்த பெயரில் இரண்டு ஆயுதங்களை வாங்கியுள்ளான் என ஒரு தொலைக்காட்சி சேனல் அறிவித்துள்ளது. ஃபேஸ்புக்கில் கிறிஸ்தவ பழமைவாதி என தன்னை சுயமாக அறிமுகப்படுத்தியுள்ளான். இவன் வேட்டையாடுதல் மற்றும் கம்ப்யூட்டர் கேமிலும் விருப்பமுள்ளவன் என நார்வே நாட்டு பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.
எங்கோ ஒரு இடத்தில் ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடந்துவிட்டாலே முஸ்லிம் தீவிரவாதிகள், இஸ்லாமிய தீவிரவாதம் என கூச்சலிடும் மேற்கத்திய ஊடகங்கள் நோர்வேயில் நடந்த சம்பவத்தில் மென்மையான போக்கை கடைப்பிடிக்கின்றன. பி.பி.சியில் வலதுசாரி கிறிஸ்தவர் என்ற வார்த்தைதான் இடம் பெற்றிருக்கிறதே தவிர தீவிரவாதி என்ற வார்த்தையை செய்தியில் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கீழே கொடுக்கப்பட்டுள்ள பி.பி.சி செய்தி லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
0 கருத்துரைகள் :
Post a Comment