புதுடெல்லி:22 உயிர்களின் பலிக்கு காரணமான மும்பை தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்து 10 தினங்கள் கழிந்தபிறகு மஹராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு படையினர் ஊகங்களின் பின்னால் அலைந்துக் கொண்டிருக்கின்றனர். குண்டுவெடிப்பின் பின்னணியில் யார் செயல்பட்டார் என்பதுக் குறித்து ஆதாரம் ஒன்று கிடைக்காத நிலையில் வதந்திகளை பரப்பி முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடத் துவங்கியுள்ளனர்.
மும்பை குண்டுவெடிப்பு வழக்குத் தொடர்பான விசாரணையில் மும்பையை சார்ந்த ஃபயாஸ் உஸ்மானி போலீஸ் கஸ்டடியில் கொல்லப்பட்டதும் புலனாய்வு ஏஜன்சிக்கு வெட்கக்கேடாக மாறியுள்ளது...
குஜராத் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அஃப்ஸல் உஸ்மானியின் சகோதரன் என்பதால் ஃபயாஸ் உஸ்மானியை கஸ்டடியில் எடுத்து விசாரணையின் பெயரால் சித்திரவதைச் செய்ததன் மூலம் அவரது மரணம் சம்பவித்துள்ளது. இதனை அவரது குடும்பத்தினரும், மனைவியும் குற்றம் சாட்டுகின்றனர். இதனைத் தொடர்ந்து மஹராஷ்ட்ரா டி.ஜி.பி அஜித் பரஸ்னிஸ் சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டார்.
நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களை விசாரணைக்காக க்ரைம்ப்ராஞ்சும், ஏ.டி.எஸ்ஸும் கஸ்டடியில் எடுத்துள்ளன.
மஹாராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு படை(ஏ.டி.எஸ்) மூன்று வழக்குகளை பதிவுச்செய்து க்ரைம் ப்ராஞ்ச் உதவியுடன் 12 ஒருங்கிணைந்த குழுக்களை நியமித்து விசாரணையை மேற்கொண்டுள்ளது. மத்திய புலனாய்வு ஏஜன்சிகளும், என்.ஐ.ஏவும் புலனாய்வுக் குழுக்களுக்கு உதவி வருகின்றன. துவக்கத்திலேயே இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரை வெளியிட்டு விசாரணையை துவக்கியது ஏ.டி.எஸ்.தீவிரவாத குண்டுவெடிப்பு வழக்குகளில் மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ்ஸுக்கும் வெட்ககேடான ட்ராக் ரிக்கார்ட் உள்ளது குறிப்பிடத்தக்கது.
2006 மும்பை ரெயில் குண்டுவெடிப்பு, 2006 செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் மலேகான் குண்டுவெடிப்பு, 2010 புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு ஆகிய வழக்குகளில் குற்றத்தை நிரூபிக்க மஹராஷ்ட்ர ஏ.டி.எஸ்ஸால் இயலவில்லை. ஹேமந்த் கர்காரே ஏ.டி.எஸ்ஸின் தலைவராக பதவி வகித்தபொழுது மட்டுமே 2008 இரண்டாவது மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஹிந்துத்துவ தீவிரவாதிகளின் பங்கினை வெளிக்கொணர்ந்தார். அதுவரை லஷ்கர்-இ-தய்யிபா, இந்தியன் முஜாஹிதீன் என்ற தொடர் பல்லவியை பாடிக்கொண்டிருந்தது மஹாரஷ்ட்ரா ஏ.டி.எஸ்.தொடர்ந்து நடந்த விசாரணைகளில் நாட்டில் நடந்த பயங்கரமான குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவ சக்திகள் செயல்பட்டது நிரூபணமானது.
2006 செப்டம்பர் எட்டாம் தேதி 37 நபர்களின் மரணத்திற்கு காரணமான முதல் மலேகான் குண்டுவெடிப்பு, 2007 பெப்ருவரி 18-ஆம் தேதி நிகழ்ந்த 68 நபர்களின் மரணத்திற்கு காரணமான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, 2007 மே மாதம் 18-ஆம் தேதி 14 பேரின் மரணத்திற்கு காரணமான மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, 2007 அக்டோபர் 11-ஆம் தேதி 3 பேர் கொல்லப்படுவதற்கு காரணமான அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, 2008 செப்டம்பர் 28-ஆம் தேதி 6 பேர் கொல்லப்படுவதற்கு காரணமான இரண்டாவது மலேகான் குண்டுவெடிப்பு ஆகியன ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்திய நாசவேலைகளாகும். ஆனால் இக்குண்டுவெடிப்புகளில் எல்லாம் அப்பாவியான முஸ்லிம் இளைஞர்கள் கொடூரமான சித்திரவதைகளுக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர்.
உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்த பிறகும் தற்பொழுதும் இவர்கள் சிறையில் துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்களான பிரக்யாசிங் தாக்கூர், சுவாமி அஸிமானந்தா, கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித், தயானந்த் பாண்டே, மேஜர் ரமேஷ் உபாத்யாய ஆகியோர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். சுவாமி அஸிமானந்தாவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இதர குண்டுவெடிப்பு வழக்குகளிலும் ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்புகளின் பங்கினை வெளிக்கொணர்ந்தது.
மும்பை குண்டுவெடிப்பு வழக்குகளில் மலேகான் மாதிரியில் ஸ்கூட்டரில் குண்டுவைத்தது நிரூபணமாகியுள்ளது. ஜவேரி பஸ்ஸார் குண்டுவெடிப்பில் ஸ்கூட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் பதிவுச் செய்யப்பட்டுள்ள வாகனம் சில மாதங்களுக்கு முன்பாக மும்பையில் உபயோகித்து வருவதாக உள்துறை செயலாளர் தெரிவித்திருந்தார். ஸ்கூட்டரின் சேஸிஸ் எண்ணை அழிக்கவும் முயற்சி நடந்துள்ளது.
ஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட 2008 மலேகான் குண்டுவெடிப்பு வழக்கும் ஸ்கூட்டரை பயன்படுத்தியே நிகழ்த்தப்பட்டது.
0 கருத்துரைகள் :
Post a Comment