July 27, 2011.... AL-IHZAN World News
மொராக்கோ ராணுவ விமானம் ஒன்று மோசமான வானிலை காரணமாக மலைப் பகுதியில் மோதி நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 78 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் மூவர் காயங்களுடன் உயிர் தப்பினர்.

மொராக்கோவின் ராணுவ விமானம் ஒன்று நேற்று டஹ்லாவில் இருந்து கினித்ரா நோக்கி விண்ணில் பறந்து சென்றது. அதில் 60 ராணுவ வீரர்கள் மற்றும் 9 விமான ஊழியர்கள் உட்பட 81 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். விமானம் ஜியூல்மின் நகரின் 10 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த மலைப் பகுதியில் சென்றபோது, மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட மூடுபனி காரணமாக மலையில் மோதி கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 78 பேர் பலியாயினர். பலத்த காயங்களுடன் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாக அதிகாரகள் தெரிவித்தனர். மொராக்கோவில் இதுவரை நடந்த விமான விபத்துகளிலேயே அதிக உயிர் இழப்பும், மோசமான விமான விபத்தும் இதுவேயாகும். இதற்கு முன்னதாக 1994ம் ஆண்டில் நடந்த விமான விபத்தில் 44 பேர் பலியாயினர். என்பது குறிப்பிடத்தக்கது.
RSS Feed
July 27, 2011
|

0 கருத்துரைகள் :
Post a Comment