animated gif how to

"ஊடகங்களைப் பயன்படுத்துவதே இன்றைய உலகின் ஜிஹாத்"

July 12, 2011 |

July 12, 2011.... AL-IHZAN Local  News
21ம் நூற்றாண்டின் மிகப் பெரும் சக்தி ஊடகப் பலமே. அந்த சக்தியைக் கொண்டுள்ளவர்களே இன்றைய உலகில் ஜாம்பவான்களாகக் கணிக்கப்படுகின்றார்கள் என ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) குறிப்பிட்டார்.

வாமி நிறுவனம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர்களுக்கான ஒருநாள் செயலமர்வு  வாமி நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. "நவீன ஊடகங்ளூடாக தஃவா" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இச்செயலமர்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், மலேஷிய முன்னாள் பிரதமர் டொக்டர் மஹாதீர் முஹம்மதின் ஒரு கருத்தையும் இங்கு நான் நினைவுகூர விரும்புகின்றேன் என அவர் குறிப்பிடுகிறார்....
"யாரிடம் கப்பல் படை இருந்ததோ அவர்கள் 19ம் நூற்றாண்டின் சக்தியாகத் திகழ்ந்தார்கள். எவரிடம் விமானப்படை இருந்ததோ அவர்கள் 20ம் நூற்றாண்டின் சக்தியாக விளங்குகிறார்கள். யாரிடம் ஊடாகப் பலம் இருக்கிறதோ அவர்கள்தான் 21ம் நூற்றாண்டின் சக்தியாகத் திகழ்வார்கள்" எனக் குறிப்பிட்டார்.

இன்று முஸ்லிம்களுக்கெதிரான உளவியல் யுத்தம் மேற்குலகினால் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனை மேற்கொள்ள ஊடகமே ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. எனினும், முஸ்லிம்கள் இது குறித்து இன்னும் உணராதவர்களாகவே உள்ளனர்.

மேலும், சமகால இஸ்லாமிய அறிஞர் ஷெய்க் யூசுப் அல் கர்ளாவி அவர்களது கருத்தொன்றையும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அவர் "ஊடகங்களைப் பயன்படுத்துவதே இன்றைய உலகின் ஜிஹாத்" என்கிறார். எனினும், இன்று எம் முஸ்லிம் சமூகம் புகைப்படம் பிடிப்பது ஹலாலா, ஹராமா என்ற விவாதத்தில் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!