July 13, 2011.... AL-IHZAN Local News
அறிவிப்பாளர் பரீன் வபாத்தானார் இலங்கை வானொலி , தொலைக்காட்சி பகுதி நேர அறிவிப்பாளராக கடமையாற்றிய ஊடகவியலாளர் பரீன் அப்துல் காதர் நேற்று காலை வபாத்தானார் இன்னாலி ல்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். சில நாட்கள் சுகவீனம் காரணமாக தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று தனது 42 வது வயதில் வபாத்தானார்.
மன்னார் காக்கையன் குளத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் கொழும்பு பல்கலை கழக பட்டதாரியும், கொழும்பு குணசிங்கபுர அல் ஹிக்மா பாடசாலையின் ஆசிரியருமாவார். இவர் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் மாந்தை தொகுதில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராகவும் போட்டியிட்டுள்ளார்...
இவரின் குடும்பத்திற்கு நீதியமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹகீம் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார். இவரின் ஜனாஸா நல்லடக்கம் நேற்று இரவு வவுனியா மாங்குளம் நேரியன் குளத்தில் இடம்பெற்றுள்ளது.
News: Lankamuslim
News: Lankamuslim
RSS Feed
July 13, 2011
|




1 கருத்துரைகள் :
இவரின் இழப்பு இலங்கை முஸ்லிம்களிடத்தில் இன்னொரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் பர்ஸக்குடைய வாழ்விற்கும் குடும்பத்தினரிற்காகவும் கருணையாளனிடம் பிரார்த்திப்போமாக.
Post a Comment