July 24, 2011.... AL-IHZAN World News
பூகோள கிராமம் என்று வர்ணிக்கப் படும் மிக விரைவான தகவல் பரிமாற்ற உலகில் நாம் வாழ்கின்றோம். உலகின் ஏதாவது ஒருகிராமத்தில் ஒரு சிறு சம்பவம் நடைபெற்றாலும் உடனடியாக உலகின் அடுத்த பகுதியில் இருப்பவர்களுக்கு அந்த தகவல் சென்றுவிடும் என்று நாம் கூறினாலும் இன்றும் உலகின் பல பாகங்களில் மக்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளனர்.
அவர்கள் பற்றிய செய்திகள் வெளியில் வராமல் அந்த தேசங்களின் அரச இயந்திரங்கள் அந்த மக்களை கடுமையான அடக்கு முறைக்குள் ஒடுக்கி வைத்துள்ளது.(வீடியோ இணைப்பு)
அவ்வாறு அடக்கு முறையை மேற்கொண்டு வரும் நாடுகளில் ஒன்றுதான் சீனா. சீனா சிங்கியாங் என்று சொல்லும் கிழக்கு துருக்கி தேசம் 1949 இல் கம்யூனிச சீனாவினால் ஆக்கிரமிக்கப்பட்டது. அன்றில் இருந்து கிழக்கு துருக்கி முஸ்லிம்கள் தம்மை அடக்கு முறைகளில் இருந்து விடுவிக்க போராடி வருகின்றனர். சீனா அதன் மக்கள் தொகையில் பாரிய மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பான்மை உய்க்ஹூர் -Uyghur- முஸ்லிம்களை அதன் நகரங்களில் சிறுபான்மையாகியுள்ளது.
அவர்கள் சீனாவின் அடக்கு முறைகளுக்கு எதிராக அணிதிரளும் ஒவ்வொரு தடவையும் அவர்களை மிகவும் மோசமாக ஒடுக்கி வருகின்றது. அந்த தேசத்தின் உய்க்ஹூர் முஸ்லிம் மக்கள் பலமான ஒடுக்கு முறைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். சிங்கியாங்கை ஆக்கிரமித்து நிற்கும் சீனர்கள் உய்க்ஹூர் இன சிறுவன் ஒருவனை கதரக் கதர தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவு ஒன்று கடந்த21 ஆம் திகதி Youtube.com பில் பதிவு செயப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவு உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வீடியோ பதிவை இங்கு தருகின்றோம்.
News: OurUmmah
0 கருத்துரைகள் :
Post a Comment